சங்கத்தின் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா 21.06.2009 அன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் திரு. K.சீனிவாசன், திருச்சிராப்பள்ளி மண்டல தலைவர் திரு. சையது முஸ்தபா, திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்க தலைவர் திரு. சுப்பிரமணி, செயலாளர் மாரிக்கண்ணன் மற்றும் கிசோர் டேவிட் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் இருநூற்றிக்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.