இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

முக்கியச் செய்தி

                            நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் மாற்றத்திறனுடையோர் சம்மந்தப்பட்ட முக்கிய நிகழ்வுகள், முக்கிய செய்திகள் மற்றும் மாற்றுத்திறனுடையோர்க்கு பயனளிக்கக்கூடும் என நினைக்கும் அனைத்து செய்திகளையும் குறுந்தகவல் (SMS) மூலம் சற்றேரக்குறைய 600 நபர்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கின்றது. 

மாற்றுத்திறனுடையோர்க்கு ஊர்திப்படி (Conveyance Allowance) உயர்வு

                   தமிழக அரசுத்துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனுடையோர்க்கான பயணப்படி எனப்படும் ஊர்திப்படியினை ரூபாய் 300லிருந்து ரூபாய் 1000மாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

அதற்கான அரசாணையைப் படிக்க இங்கே சொடுக்கவும்