இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

தமிழக நிதிநிலை அறிக்கை - 2011-12 ல் மாற்றுத்திறனாளர்களின் நிலை

               சென்னை, ஆக.4 (டிஎன்எஸ்) அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும். இதற்கென தலைமைச் செயலாளரின் கீழ், பல்துறை செயலாளர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து அனைத்து அரசுப் பணிகளிலும் மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும். என்று இன்று (ஆக.4) பேரவையில் பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்டது.