மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் - சென்ற மழை காலத்தில் - சென்ற மழை காலத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செல்லும் பாதை மேற்கண்டவாறு சேறும் சகதியுமாகவும், கழிவு நீரால் நிறைந்ததாகவும் இருந்தது சென்ற ஆண்டு மட்டுமல்ல ஒவ்வொரு மழைகாலத்திலும் இதுதான் நிலை. மாற்றுத்திறனாளர் நல அலுவலகத்திற்கு வரும் அனைவராலும் நடந்து வரமுடியுமா கழிவு நீர் நிறைந்த குழிகளைத் தாண்டி வரமுடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது என்பது தான் உண்மை. இந்த
அலுவலகத்திற்கு வரும் பெரும்பாலானோர் தவழ்ந்து வருபவர்கள் தான் பல்வேறு தொலைதூர ஊர்களிலிருந்து வருவதனால் அவர்களிடம் மூன்று சக்கர சைக்கிளோ அல்லது வேறு வாகனங்களோ கண்டிப்பாக இருக்காது. அவர்களின் கதி என்ன?. கண்டிப்பாக இந்த தண்ணீரில் இரங்கித்தான் சென்றாக வேண்டும். இதனைப்பற்றி மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நல அலுவலரிடம் பேசினால் "இது சம்மந்தமாக பல அலுவலகங்களுக்கு அழைந்தும் பல கடிதங்கள் எழுதியும் எந்தப்பயனும் இல்லை" என்று பதில் தந்தார். இது சம்மந்தமாக பார்வையற்றோர் அமைப்பைச் சார்ந்த திரு. மணியன் அவர்களும் "சட்டப்பேரவை மனுக்கள் குழு"விற்கும் மற்றும் அனைத்து சம்மந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கும் கோறிக்கைக் கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் இல்லை. சட்டப்பேரவைக் குழுவிற்கு அனுப்பிய மனுவிற்கு மட்டும் திரு.சவுண்டையா அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபொழுது கடந்த பிப்ரவரியில் நடந்த கூட்டத்தில் உடனடியாக சாலை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. நமக்காக நல்ல சேவை புரிந்தமைக்காக பரிசு பெற்ற அந்த ஆட்சித்தலைவரும் அதனை கண்டுகொள்ளவில்லையென்பது மிகவும் துரதிஷ்டவசமானது. (சட்டப்பேரவை மனுக்கள் குழுவிற்கு என்ன அதிகாரம் உள்ளதோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்). இதற்கிடையே தேர்தல் முடியட்டும் உடனடியாக சாலை அமைத்துவிடுவார்கள் என்பது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் ஆறுதல். மாவட்ட ஆட்சித்தலைவரும் சென்றுவிட்டார், தேர்தலும் முடிந்துவிட்டது, ஆட்சியும் மாறிவிட்டது, ஆனால் சாலையும், எங்களின் நிலைமையும்?

No comments:
Post a Comment