இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

வாங்க பழகலாம்

               நாம் அன்றாட வாழ்வில் பலவிதமான மாற்றுத்திறனாளர்களை சந்திக்கின்றோம். அவர்களில் காதுகேளாத மாற்றுத்திறனாளர்களிடம் மட்டும் பழகுவது சற்று கடினமாக இருக்கின்றது.  காரணம் நாம் என்ன சொல்கின்றோம் என்பதனை அவர்கள் விளங்கிக்கொள்ளுமாறு நம்மால் பேச இயலாதுபோகின்றது.  மேலும் அவர்கள் வாய் பேச இயலாதவர்கள் என்றால் அவர்கள் சொல்லுவதனையும் நம்மாள் விளங்கிக்கொள்வது கடினமே.
                ஆனால் அவர்களுக்கான சைகை மொழியினை நாம் தெரிந்துகொண்டால் அவர்களுடன் எளிதாக உரையாடலாம்.  எது எப்படியிருந்தாலும் காதுகேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளர்களிடம் உரையாடுவது முற்றிலும் மாறுபட்ட அனுபவமே.  வாருங்கள் நாமும் சைகை மொழியின் அரிச்சுவட்டினை கற்றுக்கொள்ளளாம்.

No comments:

Post a Comment