நாம் அன்றாட வாழ்வில் பலவிதமான மாற்றுத்திறனாளர்களை சந்திக்கின்றோம். அவர்களில் காதுகேளாத மாற்றுத்திறனாளர்களிடம் மட்டும் பழகுவது சற்று கடினமாக இருக்கின்றது. காரணம் நாம் என்ன சொல்கின்றோம் என்பதனை அவர்கள் விளங்கிக்கொள்ளுமாறு நம்மால் பேச இயலாதுபோகின்றது. மேலும் அவர்கள் வாய் பேச இயலாதவர்கள் என்றால் அவர்கள் சொல்லுவதனையும் நம்மாள் விளங்கிக்கொள்வது கடினமே.