மனிதர்களுக்கு எப்பவுமே கலையின் மீது ஒரு தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் பிறவியிலோ, விபத்திலோ மனிதர்களின் இயல்பு நிலையிலிருந்து மாறியவர்களான மாற்றுத் திறனாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களிடம் புதைந்துள்ள கலைத் தாகத்தைக் கண்டு அறிந்து, அவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சியளித்து, அவர்களின் மூலம் உருவாக்கப்பட்ட 'மா' திரைப்படத்தை தனது முதல் திரைப்படமாக தயாரித்திருக்கிறது 'கலைவிழி'.
கலை ஆர்வமுள்ள மாற்றுத் திறனாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏறத்தாழ மூன்று மாத காலம் திரைக்கலை பயிற்சியளிக்கப்பட்டது. பல்வேறு திரைப்படக் கல்லூரிகளைச் சார்ந்த பல்வேறு பிரிவு ஆசிரியர்களும் திரையுலக வல்லுநர்களும் திரைப்படத் தொழில்நுட்பத்தைக் கற்பித்தார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளர்கள் இப்பயிற்சியை முழுமையாக நிறைவு செய்தார்கள்.
மாற்றுத் திறன் கலைஞர்களின் கலைக்கூடமாக 'கலைவிழி' 2009, ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று தொடங்கப்பட்டு, இதன் மூலம் 'மா' திரைப்படமும் தொடங்கப்பட்டது.
மாற்றுத் திறன் கலைஞர்கள் இப்படத்தில் பணிபுரியும் விதத்தில் விதிகளைத் தளர்த்தி, பணமின்றி அவர்கள் அனைவரும் அவரவர் பணித் துறையில் இலவசமாக உறுப்பினர்களாக ஆவதற்கு "பெப்ஸி" சங்கத் தலைவர் வி.சி.குகுநாதன் அனுமதி அளித்தார்.
இதன் மூலம் வாகனம் ஓட்டுவது, சமைப்பது எனத் தொடங்கி, படத்தொகுப்பு முதல் இயக்குநர் வரை அனைத்துப் பணிகளிலும் மாற்றுத் திறனாளர்கள் பங்கு கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'மா' திரைப்படம், உலக சாதனை நிகழ்வாகும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க மதுரையிலேயே நடத்தி முடித்துள்ளனர். இதில் பங்கேற்று, தம் பணியைச் செவ்வனே நிறைவேற்றி முடித்திருக்கும் மாற்றுத் திறனாளர்களைப் பாராட்டும் விதமாகவும் அவர்களைச் சிறப்பிக்கும் விதமாகவும்ம் 2009, டிசம்பர் 9ஆம் தேதியன்று, சென்னையில் உள்ள தென்னிந்திய வர்த்தக சபையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நன்றி:சென்னை ஆன்லைன் . காம்
http://tamil.chennaionline.com/cinema/news/newsitem.aspx?NEWSID=72336fc0-b75d-4c74-b2cb-bd1ebde2a2c9&CATEGORYNAME=TFILM
No comments:
Post a Comment