ஊனமுற்றோர் என்ற பெயரில் இயங்கும் அலுவலகங்களின் பெயர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற புதிய பெயரில் மாற்றப்பட்டு இயங்கும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
2007-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்து மேற்கொண்ட முடிவிற்கிணங்க, தமிழகத்தில் ஊனமுற்றோர் என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி மாற்றுத் திறனாளிகள் என அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து 2010 - 2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதல்-அமைச்சர் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.