இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

ஊனமுற்றோர் நலத்துறை அலுவலகப் பெயர்கள் மாற்றம்

            ஊனமுற்றோர் என்ற பெயரில் இயங்கும் அலுவலகங்களின் பெயர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற புதிய பெயரில் மாற்றப்பட்டு இயங்கும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு  
         2007-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்து மேற்கொண்ட முடிவிற்கிணங்க, தமிழகத்தில் ஊனமுற்றோர் என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி மாற்றுத் திறனாளிகள் என அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து 2010 - 2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதல்-அமைச்சர் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.

         அதன்தொடர்ச்சியாக, தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிற, ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் அலுவலகம் இனி மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் எனவும், தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியம் இனி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் எனவும் குறிப்பிடப்படும். ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் இனி, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் எனவும், மாவட்ட ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு அலுவலர் இனி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எனவும் குறிப்பிடப்படுவார்கள் என்றும் முதல்வர் கருணாநிதி நேற்று ஆணையிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்  
            மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக, முதல்வரின் நேரடி மேற்பார்வையில் தனித்துறை உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறையிடம் இருந்து மாற்றுத் திறனாளிகள் நலன் தொடர்பான இனங்கள் தனியே பிரிக்கப்பட்டு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
        தலைமைச் செயலகத்தில், இந்த தனித்துறையை உருவாக்கவும் தனியாகவும் ஒரு செயலாளரை நியமிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ். ஜவகர் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு அலுவலகத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய சலுகை 
            அரசு அலுவலகங்களில் பணிபுரியும், பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலக நேரம் முடிவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக புறப்பட்டு செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களுடன் சேர்ந்து வெளியேறுவதிலும், நெரிசலான நேரத்தில் பஸ் மற்றும் ரயில்களில் ஏறிச்செல்வதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

வருவாய் உச்சவரம்பு நீக்கப்படும் 
           மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற வருவாய் உச்சவரம்பு நீக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றத் திறனாளிகள் நல உதவிகளை பெறுவதற்கான வருவாய் உச்சவரம்பு முற்றிலும் நீக்கப்படும். மாற்றுத்திறனுடையோர் உயர்கல்வி பயில கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டிலிருந்து தனிக் கட்டணம் (ஸ்பெஷல் பீஸ்) செலுத்துவதிலும் விலக்கு அளிக்கப்படும்.

         மாற்றுத் திறனாளி மாணவர் இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, உணவுச்செலவுக்காக அளிக்கப்படும் உதவித் தொகை 200 லிருந்து 450 ரூபாயாக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 176 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை, முதல்வரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும். இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊனமுற்றோருக்கு இந்திய அரசின் உதவிகளும் செயல்திட்டங்களும்
ஊனமுற்றவர்கள் கணக்கெடுப்பு
                 இந்தியாவில் 2001இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் 2,31 சதவிகிதம் ஊனமுற்றோர் இருக்கிறார்கள். 2,19 கோடி பேர் ஊனமுற்றவர்களாக உள்ளனர்; பார்வையில்லாதோர், காதுகேளாதோர், பேச முடியாதோர், கால் ஊனமுற்றோர் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியோர் ஆகியோர் இதில் அடங்குவர்.      ஊனமுற்றோர்களில் எழுபத்தைந்து சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். உடல் திறன் குறைந்தோரில் 49 சதவிகிதத்தினர் படித்தவர்களாகவும், 34 சதவிகிதத்தினர் பணிபுரிபவர்களாகவும் உள்ளனர். முன்னர் மருத்துவ சீரமைப்புக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் இப்போது சமுதாயச் சீரமைப்புக்குத் தரப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு
                 
             இந்திய அரசியலமைப்பு, சமுதாயத்தில் அனைத்து மனிதர்களுக்கும் சமஉரிமை சுதந்திரம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவற்றைத் தர உறுதியளிப்பது போலவே, அச்சமுதாயம் ஊனமுற்றோரையும் சேர்த்துக் கொண்டதாகவே அமைய வேண்டும் என்று ஐயத்திற்கு இடமின்றி ஆணை பிறப்பித்துள்ளது. அரசியல் அமைப்பானது, பொருள் விவரப் பட்டியல் ஊனமுற்றோருக்கான உரிமைகளை, அதிகாரங்களைப் பெற்றுத்தரும் பொறுப்பினை மாநில அரசுக்கே நேரடியாகத் தந்துள்ளது. ஆகவே, ஊனமுற்றோரின் உரிமைகளையும் அதிகாரங்களையும் பெற்றுத் தருவதில் முதன்மைப் பொறுப்பு மாநில அரசுக்கே உரியதாகிறது.

                  அரசியலமைப்பின் சட்டப்பகுதி 253-இல் யூனியன் பட்டியல் எண் 13ன் படி, இந்திய அரசாங்கமானது, “ஊனமுற்றோருக்கான (சமஉரிமை, உரிமைப்பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்களிப்பு) சட்டம் 1995” (The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights and Full Participation Act 1995) என்ற சட்டத்தை இயற்றியது. ஊனமுற்றோருக்குச் சமஉரிமையைத் தருவதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு, உருவாக்குதலுக்கு ஊனமுற்றோரின் பங்களிப்பை உறுதி செய்வதுமே இச்சட்டம் இயற்றியதன் முக்கிய நோக்கங்களாகும். இச்சட்டம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஜம்மு -காஷ்மீர் நீங்கலாகப் பரவியுள்ளது. ஜம்மு -காஷ்மீர் அரசாங்கம் “ஊனமுற்றோருக்கான (சம உரிமை, உரிமைப்பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்களிப்பு) சட்டம் 1998” (he Persons with Disabilities (Equal Opportunities of Rights & Full Participation) Act,1998)) என்ற சட்டத்தை இயற்றியுள்ளது.

                     அனைத்து அரசாங்கங்களும் இணைந்து (மத்திய அமைச்சகம் / மாநில அரசு / யூனியன் பிரதேசம் / மத்திய அல்லது மாநில அரசின் கீழ் பணிபுரியும் நிறுவனங்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தகுதியுடைய அதிகாரிகள்) இத்திட்டத்தின் பல்வேறு பகுதிகளை செயல்படுத்துவது நடைமுறையிலுள்ளது. ஆசியா பசிபிக் பகுதியில், ஊனமுற்றவர்களின் சமஉரிமை மற்றும் முழு பங்களிப்பு குறித்த அறிக்கையில் இந்தியா கையொப் பமிட்டுள்ளது. மேலும் எல்லோரும் இணைந்த தடைகளற்ற உரிமைகளை உடைய சமுதாயத்தை விரும்பும் பிவாக்கோ மில்லேனியம் ஃபிரேம் ஒர்க் (Biwako Millennium Framework) ஒப்பந்தத்திலும் இந்தியா கையொப்பம் இட்டுள்ளது. ஊனமுற்றோரின் உரிமைகளையும், கண்ணியத்தையும் காக்கும் அதிகரிக்கும் நோக்கத்துடன் உலக நாடுகள் கலந்து கொண்ட மாநாடு மார்ச் 30, 2007-இல் நடைபெற்றது. இந்தியா உலக நாடுகளின் ஒப்பந்தத்தை 1-10-2008-இல் ஒப்புக்கொண்டது.

அரசாங்கத் திட்டங்கள்
            உடல் ஊனமுற்றோருக்குத் தேவையான உபகரணங்களை வாங்க / பொருத்த உதவுதல் ஏழ்மை நிலையிலிருக்கும் ஊனமுற்றோருக்கு தேவைப்படும் உபகரணங்களை வாங்க உதவுவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். நீடித்து உழைக்கக்கூடிய எளிமையான நவீனமான, தரமான உபகரணங்கள் வாங்க உதவுவதன் மூலம் ஊனமுற்றவர்களின், உடல் நிலையையும், மனநிலையையும் சமுதாய நிலையையும் இத்திட்டம் உயர்த்துகிறது. மேலும் அவர்களுடைய ஊனத்தினால் ஏற்படும் துன்பத்தைக் குறைத்து பொருளாதார ரீதியிலும் மேம்படுத்துகிறது.

           இத்திட்டத்தின்கீழ் தரப்படும் உபகரணங்கள் யாவும் இந்திய தரச்சான்று (ஐநஐ) பெற்றிருத்தல் அவசியம். உடல் ஊனமுற்றோருக்குத் தேவையான உபகரணங்களை வாங்க / பொருத்த உதவும் திட்டத்தின் கீழ் செய்யப்படும் மொத்த உதவிகளும், அவ்வுதவிகளைப் பெறத் தகுதியான வருமான வரம்பும் :

மொத்த வருமானம்                           உதவித்தொகை
1. மாதம் ரூ. 6500 வரை 1. உபகரணத்தின் மொத்த விலை
2. மாதம் ரூ. 6,501 முதல் ரூ. 10,000 வரை           2. உபகரணத்தின் விலையில் 50 சதவிகிதம்
             இச்சட்டம் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் இவ்வமைச்சகத்தின் கீழ் இருக்கும் தேசிய நிறுவனங்கள் மற்றும் ALMCO (a PSU0)

ஊனமுற்றோருக்குத் தரப்படும் தேசிய உதவித்தொகைத் திட்டம்
             இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் முயன்று படித்துவரும் முதுநிலை மெட்ரிக் தொழில் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு 500 புதிய உதவித்தொகை உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும் படிப்புகளுக்கு 500 புதிய உதவித் தொகை உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும் அப்படிப்பின் காலம் ஓராண்டுக்கு மேல் இருக்கவேண்டும். மூளை முடக்குவாதம், மூளைத்திறன் குறைந்தோர் போன்றோருக்கு ஒன்பதாம் வகுப்பிலிருந்தே அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சகத்தின் இணைய தளத்திலும், முன்னணி தேசிய மற்றும் வட்டார செய்தித் தாள்களிலும் உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை வரவேற்று ஜøன் மாதத்தில் விளம்பரங்கள் தரப்படுகின்றன. மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களும் இத்திட்டத்தை விளம்பரப்படுத்த வேண்டப்பட்டுள்ளன.

                40 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட ஊனமுடையோர், குடும்ப வருமானம் ரூ. 15,000/-க்கு மேற்படாதோர் உதவித்தொகை பெற தகுதியுடையவர்களாவர். தொழில்துறை சார்ந்த இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களில் வீட்டிலிருந்து வருபவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 700/-ம், விடுதியில் தங்கிப் பயில்வோருக்கு மாதம் ரூ. 1000/-ம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. தொழில்துறை சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டப்படிப்புகளுக்கு, வீட்டிலிருந்து வருவோருக்கு ரூ. 400/-ம், விடுதியிலிருந்து கற்போருக்கு ரூ. 700/-ம், மாத உதவித் தொகைகளாக வழங்கப்படுகின்றன. மேலும் ரூ.10,000/- வரை கல்விக்கட்டணத்திலிருந்து மாணவர்களுக்கு திரும்பத் தரப்படுகிறது. பார்வையற்ற மற்றும் செவித்திறனற்ற தொழில் துறை சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாற்று மென்பொருளுடன் (ங்க்ண்ற்ண்ய்ஞ் ள்ர்ச்ற்ஜ்ஹழ்ங்) கணிணி வாங்கவும் நிதியுதவி செய்யப்படுகிறது. மேலும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் ஆதார மென்பொருளுடன் கணிணி வாங்கவும் நிதியுதவி செய்யப்படுகிறது.

தேசிய நிறுவனங்கள் / உயர்தர நிறுவனங்கள்
           ஊனமுற்றோரின் உரிமை அதிகாரம் குறித்த செயல்திட்டத்தோடு இசைந்தும் அவர்கள் எதிர்நோக்கும் பன்முகச் சிக்கல்களைத் தீர்க்கவும் பின்வரும் தேசிய நிறுவனங்கள் / உயர்தர நிறுவனங்கள் ஊனமுற்றோர் அதிகமாக இருக்கும் முக்கிய இடங்களில் காட்டப்பட்டுள்ளன.

1.    பார்வைத் திறனற்றவர்களுக்கான தேசிய நிறுவனம், டேராடுன் (National Institute for the Visually Handicapped, Dehradun)
2.    கை, கால் ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனம், கல்கத்தா (National Institute for the Orthopaedically  Handicapped, Calcutta)
3.    செவித்திறனற்றோர் அலி யுவார் ஜங் தேசிய நிறுவனம், மும்பை (Ali Yavar Jung National Institute for the Hearing Handicapped,Mumbai)
4.    மூளைத்திறன் குறைந்தோருக்கான தேசிய நிறுவனம், செகந்தரபாத் (National Institute for Mentally Handicapped, Secunderabad)
5.    மறுவாழ்வு பயிற்சி மற்றும் ஆய்வு குறித்த நிறுவனம், கட்டாங் (National Institute for Rehabilitation Training and Research, Cuttack)
6.    உடல் ஊனமுற்றோர் சங்கம், புதுடெல்லி (Institute for the Physically Handicapped,New Delhi)
 7.     பல்வகை ஊனமடைந்தோருக்கு உரிமை அதிகாரம் தரும் தேசிய நிறுவனம், சென்னை (National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD), Chennai)


1 comment:

  1. அவர்களுக்குத் தமிழகத்தில் உரிமைகள் உண்டு என்று சொல்லி யாரையும் தயவு செய்து ஏமாறச்செய்யாதீர்கள்!இது முடமான என்னுடைய கசப்பான உண்மை.இதில் ஒட்டடைக்குச்சிக்குப் பட்டுக்குஞ்சம் கட்டிவிட்டதைபோல 'மாற்றுத்திறனாளிகள்'என்ற ஒட்டு கிரீடம் வேறு!இந்த விஷயத்தில் இந்த அரசு தடவிக்கொடுத்து செருப்பால் அடித்துக்கொண்டிருக்கிறது என்பது அனுபவமான உண்மை!

    ReplyDelete