இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

ஐஏஎஸ் தேர்வு : மாற்றுத்திறன் படைத்த 30 பேர் தேர்ச்சி

2009ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் பணிகள் முக்கிய தேர்வு முடிவுகள் வியாழக் கிழமையன்று வெளியிடப்பட்டன. இதில் முதலிடம் பெற்ற 25 பேரில் சென்னையை சேர்ந்த 2 பேர் இடம் பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 875 பேரில் 30 பேர் மாற்றுத்திறன் படைத்தவர்களாவர். இந்த முடிவுகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு :

இந்திய சிவில் பணிகள் தேர்வுக்கு மொத்தம் 4,09,110 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,93,091 பேர் முதல் கட்டத் தேர்வு எழுதினர். இதில் 12,026 பேர் முக்கிய எழுத்து தேர்வுக்குத் தகுதி பெற்றனர்.
2432 பேர் கடந்த மார்ச்-ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்ட ஆளுமைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் 875 பேர் (680 ஆண்கள், 195 பெண்கள்) ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் இதர மத்திய பணிகளுக்கு நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

2009 சிவில் பணிகள் தேர்வில் டாக்டர் ஷாபேசல் முதலிடம் பெற்றுள்ளார். இவர் ஸ்ரீநகரில் மருத்துவப் பட்டம் பெற்றவர். முதல் முயற்சியிலேயே இவர் வெற்றி பெற்றுள்ளார். காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர் சிவில் பணிகளுக்கான தேர்வில் முதலிடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். தில்லியைச் சேர்ந்த பொறியாளர் திரு பிரகாஷ் ராஜ் புரோஹித் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இது இவரது இரண்டாவது முயற்சியாகும்.

பெண்களில் தில்லியைச் சேர்ந்த செல்வி இவா சகாய் முதலிடம் பெற்றுள்ளார். எம்ஏ பட்டதாரியான இவருக்கு இது முதல் முயற்சியாகும். முதலிடம் பெற்ற 25 பேரில் 10 பேர் பெண்களாவர்.

முதல் 25 இடம் பெற்றவர்களில் 15 பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள், சென்னை, மும்பை மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து தலா இரண்டு பேரும், அலகாபாத், சண்டிகர், கட்டாக் மற்றும் ஐதராபாத்தில் இருந்து தலா ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் பணிகளுக்கான நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 875 பேரில் 30 பேர் மாற்றுத்திறன் படைத்தவர்கள். இவர்களில் ஐந்து பேர் பார்வையற்றவர்களாவர்


நன்றி: இந்நேரம்.காம்

No comments:

Post a Comment