இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலத்தில் எனது மனதை பாதித்த ஒரு நிகழ்வினை இந்த பதிவின் மூலம் கூற கடமைப்பட்டுள்ளேன்.
மாற்றுத்திறனுடையோரின் உணர்வை மதித்து நமக்கு எந்த இடத்திலும் எந்தஒரு தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த ஊர்வலத்திற்கு மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு வழங்கிய திருச்சி கண்டோண்மெண்ட் காவல் நிலையத்திற்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கும் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வது இந்த நேரத்தில் மிகவும் சிறப்பானதாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

காரணம் சற்றேரக்குறைய ஐம்பது பேர் பங்கேற்ற இந்த ஊர்வலத்திற்கு காவலர்களி்ன் சார்பில் மூன்று காவலர்கள் முன்னே வழியமைத்துக்கொண்டு செல்ல ஊர்வலத்தின் பின்னே ஒரு ஆய்வாலர் மற்றும் சில காவலர்கள் கொண்ட ஈப்பும் அதன் கூட்டத்தின் முன்னே ஒரு வேன் முழுவதும் மகளிர் காவலர்கள் மற்றும் இரண்டு துணை ஆய்வார்கள் என ஒரு மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு வழங்கிய காவல்துறைக்கு எத்தனை நன்றிகள் தெரிவித்தாலும் மிகையாகாது.
இந்த நிகழ்வு காவல்துறைக்கு மாற்றுத்திறனுடையோர்பால் உள்ள ஒரு நல்லெண்ணத்தினையே வெளிப்படுத்துவதாக நான் நினைக்கின்றேன்.
இந்த நேரத்தில் காவல்துறை சம்மந்தப்பட்ட மற்றோன்றையும் நினைவு கூற விளைகின்றேன். மாற்றுத்திறனாளர்கள் பல்வேறு அரசுத்துறைகளில் இன்றும் அலைக்கழிக்கப்பட்டு வரும் நிலை நிலவிக்கொண்டுதான் உள்ளது. இதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மற்றவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் காவல்துறை (ஒருசில சூழ்நிலையினை சமாளிக்க கண்டிப்பாக காவல்துறைக்கு இந்த கடுமையான நடைமுறை அவசியமாகிறது) மாற்றுத்திறனாளர்களிடம் மிகவும் கனிவுடனேயே நடந்துகொள்கிறது. இது நான் பல்வேறு சூழ்நிலைகளில் அனுபவப்பட்டதனால் இதனையும் இங்கே நினைவு கூறுவது சாலச்சிறந்ததாக இருக்கும் என கருதுகிறேன்.
காவல்துறைக்கு நன்றி.

No comments:
Post a Comment