இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

வழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம்.

               டிசம்பர்-3 உலக ஊனமுற்றோர் (மாற்றுத்திறனுடையோர்) தினத்தினை முன்னிட்டு நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஒரு விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது.

                இவ்வூர்வலம் திருச்சிராப்பள்ளி ரயில்வே நிலையம் முன்புள்ள காதிகிராப்ட் மைதானத்திலிருந்து அரிஸ்டோ வழியாக மிளகுபாறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வெஸ்லி பள்ளி எதிரில் முடிக்க கிட்டமிடப்பட்டு காலை 10.30 மணிக்கு துவக்கி 11.30 மணிக்குள் திட்டமிடப்பட்டபடி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

                   இவ்விழிப்புண்வு முகாமிற்கு நேயம் அரக்கட்டளையின் தலைவர் திரு.என்.டி.மணியன் அவர்கள் தலைமைதாங்கினார், நமது சங்கத்தின் செயலாளர் திரு.பி.மாரிக்கண்ணன் அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 

                    திரு.எஸ்.மார்டின், வழக்கறிஞர் மற்றும் திரு அ.கலைச்செல்வன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், ஆகியோர் ஊர்வலத்தினை கொடியசைத்து துவக்கிவைத்தனர்.

                   திரு.பாக்கியராஜ், திரு.பராசக்திபாலு, திரு.சுப்பிரமணியன், திரு.பாலகிருஷ்ணன் மற்றும் திரு. கிளமண்ட் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

                          மேலும் கண்ணன், ஆண்டணி, விஜய், அப்துல் சலாம், ஷாஜகான், மாறன், அப்துல்சம்மது, தேவேந்திரன், வல்லரசு, பிச்சை, சிக்கன் மற்றும் பலர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
               
                        ஊர்வலத்தின் முடிவில் நமது பொருளாளர் மு.வெங்கட்ராமன் வந்திருந்த அனைவருக்கும் நன்றிதெரிவித்துக்கொண்டார்.

                      ஊர்வலத்தின் முடிவில் வந்திருந்த நபர்களில் சிலர் மட்டும் மூன்று குழுக்களாக பிரிந்து. திருச்சிராப்பள்ளி தொடர்வண்டி நிலையம், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் போன்ற பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் அச்சிட்டு வைக்கப்பட்டிருந்த ஊனத்தைத் தடுப்பது எப்படி என்னும் விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியினை மேற்கொண்டனர். 

No comments:

Post a Comment