நாம் அன்றாட வாழ்வில் பலவிதமான மாற்றுத்திறனாளர்களை சந்திக்கின்றோம். அவர்களில் காதுகேளாத மாற்றுத்திறனாளர்களிடம் மட்டும் பழகுவது சற்று கடினமாக இருக்கின்றது. காரணம் நாம் என்ன சொல்கின்றோம் என்பதனை அவர்கள் விளங்கிக்கொள்ளுமாறு நம்மால் பேச இயலாதுபோகின்றது. மேலும் அவர்கள் வாய் பேச இயலாதவர்கள் என்றால் அவர்கள் சொல்லுவதனையும் நம்மாள் விளங்கிக்கொள்வது கடினமே.
இதைப் படிங்க முதல்ல
நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
தமிழக நிதிநிலை அறிக்கை - 2011-12 ல் மாற்றுத்திறனாளர்களின் நிலை
சென்னை, ஆக.4 (டிஎன்எஸ்) அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும். இதற்கென தலைமைச் செயலாளரின் கீழ், பல்துறை செயலாளர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து அனைத்து அரசுப் பணிகளிலும் மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும். என்று இன்று (ஆக.4) பேரவையில் பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்டது.
Labels:
அறிவிப்புகள்,
மற்ற வலை பதிவுகள்,
வேலை வாய்ப்பு,
ஜெயலலிதா
குறுந்தகடு வெளியீடு - மாற்றுத்திறனுடையோருக்காக.
மாற்றுத்திறனுடையோருக்காக பல்வேறு வகைகளில் பல உபயோகமான செயல்களைச் செய்துவரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் திரு. என். முரளிதரன் அவர்கள் தற்சமயம் முயற்சி செய்து வெற்றிபெற்றுள்ள வென்று காட்டியுள்ளதுதான் போட்டித் தேர்வுகளுக்காக பயின்றுவரும் மாற்றுத் திறனுடையோர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படக்கூடிய ஒலிவடிவிலான குறுந்தகடு. மாநில அரசு, மத்திய
சாதனைப் பெண் - ஜெனிதா ஆண்டோ
குழந்தையைப் பெற்ற அனைத்து தாய், தந்தையருக்கும் தான் பெற்ற குழந்தையை இப்படி வளர்க்க வேண்டும் அப்படி வளர்க்க வேண்டும், வருங்காலத்தில் அவர்கள் இன்னார் ஆகவேண்டும் என்ற கனவுகள் இருக்கும். அப்படியே இல்லாவிட்டாலும் தனது குழந்தை சமூகத்தில் பெயர்செல்லும்படியாக வாழவேண்டும் என்ற ஆசையாவது இருக்கும். ஜெனிதா ஆண்டோ என்ற இந்த குழந்தையைப் பெற்ற திரு.காணிக்கைராஜ் தம்பதியருக்கும் ஒரு ஆசையிருந்தது. அது தனது மகளை நடனப்பள்ளியில் சேர்த்து ஒரு நாட்டியக் கலைஞராக ஆக்க
Labels:
சந்திப்பு,
சாதனையாளர்
அரசு போட்டித்தேர்வுகளுக்கான குறுந்தகடு வெளியீட்டு விழா
அரசு போட்டித்தேர்வுகளை சந்திக்கும் மாற்றுத் திறனாளர்களின் வசதிக்காகவும் அவர்களின் சிரமத்தைக் குறைக்கும் விதமாகவும் UPSC, TNPSC போன்ற அரசுத் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாகவும் கற்பித்தலை எளிமைப்படுத்தக்கூடிய ஒலிவடிவ குறுந்தகடு ஒன்றினை திருச்சிராப்பள்ளி மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் திரு.அ.கலைச்செல்வன் அவர்கள் அதன் வெளியீட்டு விழா வரும் 26.07.2011 அன்று காலை பதினோரு மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரின் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும் டிசம்பர் - 3 விடுப்பு
கடந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளர்களுக்கு உலக மாற்றுத்திறனாளர் தினமான டிசம்பர்-3ம் தேதி மாநில அரசு மற்றுத் மாநில அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளர்களுக்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த சலுகைகளை மற்ற அனைத்துத்துறையினரும் பெற்றுவந்துள்ள நிலையில் போக்குவரத்துத்துறைக்கு மட்டும் வழங்கப்படவில்லை. இதனை அறிந்த இன்றைய முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் போக்குவரத்துத்துறையிலிருக்கும் மாற்றுத்திறனாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் அவர்களுக்கும் டிசம்பர் - 3 அன்று சற்செயல் விடுப்பு வழங்கி ஆணையிட்டுள்ளார்.
Labels:
அரசாங்க சலுகைகள்,
அரசாணைகள்,
அரசு வேலை,
ஜெயலலிதா
Subscribe to:
Posts (Atom)