இதைப் படிங்க முதல்ல
நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts
டிசம்பர்-3 2010 அன்று நடைபெற்ற ஊர்வலத்தைப்பற்றிய நாளிதல் செய்தி நறுக்குகள்
டிசம்பர்-3 2010 உலக ஊனமுற்றோர் தினத்தன்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் பற்றிய செய்திகள் மறுநாள் காலை செய்தி தாள்களில் பிரசுரமான செய்திகளின் செய்தி நறுக்குகள்
டிசம்பர்-3 2010 அன்று மாலை செய்தி நறுக்குகள்
டிசம்பர்-3 2010 உலக ஊனமுற்றோர் தினத்தன்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் பற்றிய செய்திகள் அன்று மாலை செய்தி தாள்களில் பிரசுரமான செய்திகளின் செய்தி நறுக்குகள்
மாலை முரசு
மாலை மலர்
காவல்துறையின் கனிவு
இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலத்தில் எனது மனதை பாதித்த ஒரு நிகழ்வினை இந்த பதிவின் மூலம் கூற கடமைப்பட்டுள்ளேன்.
மாற்றுத்திறனுடையோரின் உணர்வை மதித்து நமக்கு எந்த இடத்திலும் எந்தஒரு தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த ஊர்வலத்திற்கு மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு வழங்கிய திருச்சி கண்டோண்மெண்ட் காவல் நிலையத்திற்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கும் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வது இந்த நேரத்தில் மிகவும் சிறப்பானதாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

Labels:
காவல் துறை,
கொண்டாட்டங்கள்,
செய்திகள்,
டிசம்பர்-3
வழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம்.
டிசம்பர்-3 உலக ஊனமுற்றோர் (மாற்றுத்திறனுடையோர்) தினத்தினை முன்னிட்டு நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஒரு விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது.
இவ்வூர்வலம் திருச்சிராப்பள்ளி ரயில்வே நிலையம் முன்புள்ள காதிகிராப்ட் மைதானத்திலிருந்து அரிஸ்டோ வழியாக மிளகுபாறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வெஸ்லி பள்ளி எதிரில் முடிக்க கிட்டமிடப்பட்டு காலை 10.30 மணிக்கு துவக்கி 11.30 மணிக்குள் திட்டமிடப்பட்டபடி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
Labels:
கட்டுரை,
கொண்டாட்டங்கள்,
செய்திகள்,
டிசம்பர்-3,
நிகழ்ச்சிகள்
செந்தமிழும் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்புகளும்
"சாகும்போதும் தமிழ்படித்து சாகவேண்டும்
என் சாம்பல் தமிழ்மணந்து போகவேண்டும்"
என் சாம்பல் தமிழ்மணந்து போகவேண்டும்"
என்கிற பாவேந்தரின் வாக்கினைப் பின்பற்றி, தமிழின் தொண்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப்பண்பு, பண்பாட்டுக்கலையறிவு வெளிப்பாடு, பிற மொழித்தாக்கமில்லாத்தன்மை, குறைவற்ற இலக்கிய வளம், உயர் சிந்தனைகள், கலையிலக்கிய தனித்தன்மை, மொழிக்கோட்பாடுகள் போன்ற டசெம்மொழித்தகுதிகளைச் சிறப்பிக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் பலரும் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவருவதை வரலாறுகள் சொல்கின்றன.
மாற்றுத்திறனுடையோர் மறுவாழ்வுத்துறை
LAB TECHNICIAN COURSES: (DMLT)
இரத்தப் பரிசோதகர் பயிற்சி:
மேற்கண்ட இரண்டு வருட லேப் டெக்னீசியன் கோர்ஸ் இலவசமாக பயில விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
கடைசித்தேதி : 13.09.2010
தகுதி : பனியிரண்டாம் வகுப்பு (அறிவியல்)
வயது வரம்பு : 18 முதல் 30 வயது வரை
ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

மாற்றுத்திறனாளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், இரண்டு மார்பளவு புகைப்படம், மற்றும் படித்ததற்கான சான்றிதல்களுடன் மாற்றுத்திறனுடையோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
Labels:
DDAWO,
அரசாங்க சலுகைகள்,
சமூகநலம்,
செய்திகள்
அதிகாரி முருகன் ஐ.ஏ.எஸ்(!) - சிந்தனையில் ஊனம்
பார்ப்பனிய நஞ்சைச் சுமந்து வரும் வார ஏடு துக்ளக்கில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.(!) அதிகாரி முருகன் என்பவர் மாற்றுத்திறனாளிகள் மீது பாய்ந்து கடித்திருக்கிறார். 30.06.2010 துக்ளக்கில் “உடல் ஊனமுற்றவர்களுக்குச் சலுகை அளிப்பது என்பது வேறு, அவர்களுக்கு அரசு வேலை அளித்து நிர்வாகத்தைச் சீர்குலைப்பது வேறு என்பதைத் தமிழக முதல்வர் உணரவேண்டும் ” என்று எழுதியிருக்கிறார். இதைக் கண்டித்துப் பார்வை யற்றோர் அமைப்புகளின் சார்பாக அனுப்பப்பட்ட கடிதமும் அடுத்த (14.7.2010) துக்ளக் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி சிறுமிகள் மீட்பு
கடலூர்:சிதம்பரம் மற்றும் கடலூர் பஸ் நிலையங்களில் அனாதைகளாக திரிந்த மாற்றுத்திறனாளி சிறுமிகள் இருவரை போலீசார் மீட்டு இந்திய குழந்தைகள் நலச்சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.சிதம்பரம் பஸ் நிலையத்தில், 10 வயது சிறுமி நீண்ட நேரமாக தனியாக நின்று கொண்டிருந்தார். சந்தேகமடைந்த சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில், சிறுமியால் கேட்கும் மற்றும் பேசும் திறன் இல்லை என தெரிய வந்தது.
Labels:
காவல் துறை,
செய்திகள்,
மற்ற வலை பதிவுகள்
பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளி மாணவர் சேர்க்கை சிறப்பு முகாமில் அமைச்சர் பங்கேற்பு
திருச்சி: திருச்சியில் உள்ள பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தேசிய அடையாள அட்டை வழங்கி, பள்ளிச் சேர்க்கை, கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கிக்கடனுதவி, மாதாந்திர உதவித்தொகை, இலவச பஸ் பயணச்சலுகை மற்றும் திருமண நிதியுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நிர்ணயித்த இலக்கை தாண்டியது மாற்றுத்திறனாளி பள்ளி சேர்க்கை
திருச்சி: ""தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்கை தாண்டி, திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, பள்ளியில் சேர்த்துள்ளது,'' என்று கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அகஸ்டின் பீட்டர் பாத்திமா தெரிவித்தார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையில் இரண்டு சதவீதம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக புள்ளவிபரம் தெரிவிக்கிறது.
அதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 5,109 பேர் இருப்பதாக கடந்த பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது. அவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது. திருச்சி மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், கிராம செவிலியர்கள், மறுவாழ்வுத்திட்ட அலுவலர்களை கொண்டு மாற்றுத்திறனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இந்த கல்வியாண்டில் மட்டும் 319 மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை, எஸ்.எஸ்.ஏ., சார்பில் மொத்தம் 5,235 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்கை தாண்டி, திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ந்துள்ளது. ஜூன் 30ம் தேதி வரை தொடரும் பணியில் மேலும் மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்படுவர். மனநிலை பாதிக்கப்பட்ட மாணவரை, சாதாரண மாணவர் படிக்கும் பள்ளிகளில் சேர்க்க முடியாது. சிறப்புப்பள்ளிகளில் அவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்
நன்றி:தினமலர்.காம்
Labels:
அரசாங்க சலுகைகள்,
செய்திகள்,
மற்ற வலை பதிவுகள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு
நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து அதற்கான நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை செயல்படுத்திட தற்போது முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்திடும் விதமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகளில் பயிலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே கல்விக் கட்டணத்தை ரத்துசெய்ததுடன், இந்த கல்வியாண்டு முதல் அவர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேணடிய தனிக் கட்டணத்தை ரத்து செய்தும், மாநில அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் எவ்விதத்திலும் தடையின்றிப் பெற்றுப் பயன் அடைவதற்கு உதவும் வகையில், நலத்திட்ட உதவிகளைப் பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்சவரம்பினை முற்றிலும் ரத்து செய்தும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் உத்தரவால் 22,685 மாற்றுத் திறனாளிகள் ஆண்டுக்கு 7.71 கோடி ரூபாய் அளவிற்கு பயன்பெறுவர் எனக் கூறப்படுகிறது.

நன்றி:சிவாஜி டீவி. காம்
வீட்டிலேயே கல்வி
கடுமையாக பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, வீட்டிற் கே சென்று சிறப்பாசிரியர்கள் கல்வி வழங்க வேண்டும்” என கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டார்.அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய கண்காணிப்பாளர்கள், தொண்டு நிறுவன இயக்குநர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக் கான ஆலோசனைக் கூட் டம் நடத்தப்பட்டது. கலெக்டர் வள்ளலார் பேசியதாவது:மாவட்டத்தில் ஆறு முதல் 14 வயதிற்கு உட் பட்ட பள்ளி செல்லா குழந் தைகள் அனைவரையும் கண்டறிந்து, ஒரு மாதத் திற்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும்.
நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இனி நாம் இரயில் பெட்டியில் முன்பதிவின்றி பயணம் செய்யலாம்.
கடந்த 30.06.2009 வரை மாற்றுத்திறனுடையோராகிய நாம் இரயிலில் பயணம் செய்ய எட்டுபேர் மட்டுமே அமரக்கூடிய வகையில் இணைக்கப்பட்டிருந்த சிறப்புப் பெட்டியில் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் நாம் சாதாரண பயணச்சீட்டுடன் பயணம் செய்யும் வசதியிருந்தது.
ஆனால் 01.07.2009 முதல் அந்த சிறப்புப் பெட்டி முன்பதிவு பெட்டியாக மாற்றப்பட்டது. அதில் மாற்றுத்திறனுடையோர் முன்பதிவு செய்தே பயணம் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.
Labels:
உண்ணாவிரதம்,
கருணாநிதி,
செய்திகள்,
பத்திரிக்கை பதிவுகள்,
முதல்வர்
ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அரியாமை
துக்ளக் வார இதழ் (30-06-2010) செய்தி:
தற்போது, தமிழக முதல்வர் திடீரென்று எப்போதும் இல்லாத அளவிற்கு, உடல் உறுப்புகளில் குறையுள்ளவர்கள்பால் அதிக அக்கரை எடுத்து, அவர்களை "மாற்றுத்திறனாளிகள்" என வகைப்படுத்தி, அவர்களுக்கென்று தனி துறையை ஏற்படுத்தி, பல திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறார்.
1975-ஆம் ஆண்டு முதல் இவர்களுக்கு வேலை வாய்ப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு முன்னுரிமை அளித்து, அரசு வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் நடைமுறை உண்டு. இவர்களில் பலரும் அரசு வேலையில் சேர்ந்த பின்னர், ஒழுஙிகீனங்களில் மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை - நான் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.
Labels:
கட்டுரை,
செய்திகள்,
பத்திரிக்கை பதிவுகள்,
முதல்வர்
மாற்றுத்திறன் அரசுப்பணியாளர் மாநில மாநாடு
அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில மாநாடு
19-ம் தேதி சென்னையில் நடக்கிறது.
திருச்சி, ஜீன் 17, அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் மாநில மாநாடு வருகிற 19ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
ஊனமுற்றோர் துறை - ஜெ. பெருமை
ஊனமுற்றோர் நலனுக்கு தனித்துறை ஏற்படுத்தியது நான் தான் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
ஊனமுற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை 1981ல் எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். 1992ல், ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கென, ஒரு தனித் துறையையே நான் ஏற்படுத்தினேன். 1994ல், முதன் முறையாக, எனது அரசுதான், ஊனமுற்றோருக்கான மாநிலக் கொள்கையை வகுத்தது. ஊனமுற்றோருக்கு சம வாய்ப்பு அளிக்கவும், அவர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு ஊனமுற்றோர் விதிகள்2002 எனது அரசால் இயற்றப்பட்டது.

கடந்த 4ஆண்டுகளில் ஊனமுற்றோர் நலனிற்காக ரூ.4கோடி ஒதுக்கீடு: அமைச்சர் கீதாஜீவன் தகவல்!
தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் ஊனமுற்றோர் நலனிற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் நடந்த விழாவில் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)