இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
Showing posts with label சட்டம் 1995. Show all posts
Showing posts with label சட்டம் 1995. Show all posts

பகுதி - 14 - சட்டம் 1995 - அத்தியாயம் - 4

அத்தியாயம் - 4
ஊனங்கள் ஆரம்ப காலத்திலேயே அறியப்படல், மற்றும் தடுக்கப்படல் தக்க அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஊனங்கள் ஏற்படுவதை தடுக்க சில நடவடிக்கைகள் எடுத்தல்

பிரிவு:25. ஊனங்கள் ஏற்படுவதை தடுப்பதை குறிக்கோளாகக் கொண்டு தக்க அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் தன் பொருளாதார ஏற்றத்துக்கும், திறனுக்கும் ஏற்ப:-

அ. ஊனங்கள் ஏற்படுவதன் காரணங்கள் சம்பந்தமான ஆய்வு, புலனாய்வு மற்றும் கணக்கெடுத்தல் இவற்றை மேற்கொள்ளல், அல்லது மேற்கொள்ளப்பட காரணமாதல்.

பகுதி - 13 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3


மாநில செயற்குழு
பி.19.து.பி.1. இச்சட்டத்தின் கீழ் தனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ள மாநில செயற்குழு என அறியப்படும் ஒரு குழுவை மாநில அரசு நிறுவ வேண்டும்.
து.பி.2. மாநில செயற்குழுவில் அடங்கி உள்ளவர்கள்:-

            அ. சமூக நலத்துறை செயலர் வகிக்கும் பதவியால் தலைவர்.

            ஆ. ஆணையர் வகிக்கும் பதவியால் உறுப்பினர்.

பகுதி - 12 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3

மாநில ஒருங்கிணைப்பு கூட்டங்கள்
பி.17. மாநில ஒருங்கிணைப்புக் குழு, 5 மாதங்களுக்கு ஒரு முறை கூட வகுத்துரைக்க உள்ளபடி தனது கூட்டங்களில் பணிகளை மேற்கொள்ளும்போது விதிகளை அனுசரிக்கும்.
மாநில ஒருங்கிணைப்பு குழுவின் பணிகள் 
பி.18.து.பி.1. மாநில ஒருங்கிணைப்பு குழுவின் பணி யாதெனில் இச்சட்டத்தின் ஷரத்துகளுக்கு உட்பட்டு, ஊனங்கள் பற்றிய விஷயங்களில் மாநில தலைமை மையமாக செயல்பட்டு ஊனமுற்ற நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க விரிவான கொள்கை தொடர்ந்து பரிணமிக்க ஆவன செய்தல்.

பகுதி - 11 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3



உறுப்பினர்களின் சேவை விதிகள் வரைமுறைகள்:

              பி.14.து.பி.(1). இச்சட்டத்தின் கீழ் அல்லது இச்சட்டத்தால் வேறு வகையில் வழங்கப்பட்டாலன்றி விதி (ஊ) அல்லது விதி (ஏ) து.பி.2. பி.3யின்படி நியமிக்கப்பட்டுள்ள ஒரு மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டது முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு பதவியை வகிப்பார்.  இந்நிலையில் அவரது பதவிக்காலம் முடிந்துவிடட போதிலும் தனக்குப் பின் வருபவர் பதவி ஏற்கும் வரை உறுப்பினர் தனது பதவியில் தொடர்ந்து இருக்கலாம்.

            து.பி.(2) வகிக்கும் பதவியால் உறுப்பினரின் பதவி தான் உறுப்பினராக நியமிக்கப்பட  காரணமான பதவியில் இல்லாமல் போனால் உறுப்பினர் பதவியும் முடிவுக்கு வந்துவிடும்.

பகுதி - 10 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3

அத்தியாயம் - 3.

மாநில ஒருந்கிணைப்பு குழு : - 
             பி.(13). து.பி.(1) ஒவ்வொரு மாநில அரசும் குறிப்பாணை மூலம் மாநில ஒருங்கிணைப்பு குழு  என ஒரு அமைப்பை நிறுவி இச்சட்டத்தின் கீழ் அதற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பிரயோகிக்கவும், பணிகளை மேற்கொள்ளவும் வேண்டும்.

பகுதி - 9 - சட்டம் 1995 - அத்தியாயம் - 2

மத்திய செயற்குழு

து.பி (1) 
              மத்திய செயற்குழு என அறியப்படும் ஒரு குழுவை, மத்திய அரசு நியமித்து இச்சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ள செய்ய வேண்டும்.

து.பி (2)        மத்திய செயற்குழுவில் இடம் பெறுபவர்கள் : -

             அ. இந்திய அரசின் நல்வாழ்வு அமைச்சகத்தின் செயலர், வகிக்கும் பதவியால் தலைவர்.

பகுதி - 8 - சட்டம் 1995 - அத்தியாயம் - 2

உறுப்பினர்கள் தாமாகவே பதவி விலகல்

6. மத்திய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஒருவர், பிரிவு ஐந்தில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு தகுதியிழப்பிற்கு ஆட்பட்டால் அவரது பதவி காலியாகிவிடும்
மத்திய ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள்

7. மத்திய ஒருங்கிணைப்பு குழு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூடி மத்திய அரசு வகுத்துள்ளபடி, தனது கூட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக செயல்முறை ளவிதிகளை பின்பற்ற வேண்டும்.

பகுதி - 7 - சட்டம் 1995 - அத்தியாயம் - 2

அத்தியாயம் - 2
உறுப்பினர் பதவிக்காலம்

4.            1)  இச்சட்டத்தின் கீழ், அல்லது இச்சட்டத்தின்படி, டவேறு விதமாக அளிக்கப்பட்டாலன்றி, மத்திய ஒருங்கிணைப்பு குழுவிற்கு, பிரிவு மூன்று துணைப்பிரிவு இரண்டு உட்பிரிவு ஒன்று அல்லது எல் படி நியமிக்கப்படுவர்,  நியமனத் தேதி முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு பதவியை வகிப்பார்.

                அத்துடன் இவ்வுறுப்பினர், தம் பதவிக்காலம் முடிந்துவிட்ட டபோதிலும் தனது பின்வர் அப்பதவிக்கு வரும்வரை பதவியில் தொடர்ந்து இருக்கலாம்.

பகுதி - 6 - சட்டம் 1995 - அத்தியாயம் - 2

அத்தியாயம் - 2
மத்திய ஒருங்கிணைப்பு குழு

3.
                   1) மத்திய அரசு, அறிவிக்கையின் மூலம் "மத்திய ஒருங்கிணைப்பு குழு"  ஒரு அமைப்பை நிறுவி, இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பிரயோகிக்கவும், ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொள்ளவும், செய்யவும் வேண்டும்.

                  2) மத்திய ஒருங்கிணைப்பு குழுவிடம் இடம் பெறுபவர்கள்:-
                                        அ) மத்திய அரசில் நல்வாழ்வு துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வகிக்கும் பதவியால் தலைவர்.

                                        ஆ) மத்திய அரசில் நல்வாழ்வு துறைக்கு பொறுப்பு வகிக்கும் மாநில அமைச்சர், வகிக்கும் பதவியால் துணைத் தலைவர்,

பகுதி - 5 - சட்டம் 1995 - அத்தியாயம் - 1

(ஒ) "பணி அளிப்பவர்" என்பவர்
          (1)  அரசைப் பொறுத்த வரையில் துறைத் தலைவர் தன் சார்பாக நியமிக்கும் ஓர் அதிகாரி அல்லது இவ்வாறு எந்த அதிகாரியும் நியமிக்கப்படாத போது, தறைத் தலைவர்  மற்றும்,
  
            (2)  ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் முதன்மை நிர்வாக  அதிகாரி ஆவார்.

(ஓ) "நிறுவனம்" என்பது மத்திய பிராந்திய அல்லது மாநில சட்டத்தின் கீழ் அல்லது சட்டத்தால் நிறுவப்படும் ஒரு கழகம் அல்லது அரசோ, உள்ளாட்சி அமைப்போ நடத்தும் அல்லது கட்டுப்படுத்தும் அல்லது உதவும் ஒரு அதிகார அமைப்பு அல்லது குழு அல்லது 1956 (1-1956) கம்பேனிகள் சட்டத்தின் கீழ் பிரிவு 617ன் படியான தன்னகத்தே அரசின் துறைகளை கொண்டுள்ள ஓர் அரசு கம்பெனி.

பகுதி - 4 - சட்டம் 1995 - அத்தியாயம் - 1

அத்தியாயம் - 1
பூர்வாங்கம்
சிறு தலைப்பு
அளவு மற்றும் ஆரம்பம்

1. 
1)  இச்சட்டம், ஊனமுற்ற நபர்களுக்கான (பராமரிப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் குழு பங்கேற்பு) சட்டம் 1995, என அழைக்கப்படுவதாக.

2) இந்தியா முழுமைக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இது விரியும்

3) மைய அரசு, அறிவிக்கையின் மூலம் நியமிக்கும் தேதியிலிருந்து இது அமுலக்கு வரும்.

இலக்கணங்கள்

2. 
 இச்சட்டத்தில், இடத்திற்கேற்ப வேறு வகையில் தேவைப்பட்டால் அன்றி  
(அ) "முறையான அரசு" என்பது

சட்டம் 1995 (பொருளடக்கம் எண்:4 முதல் 14 முடிய) (பகுதி - 3)

5. கல்வி முறையான அரசு மற்றும் உள்ளுர் அதிகார அமைப்புகள் ஊனமுற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி முதலியன அளித்தல்.

முறையான அரசு மற்றும் உள்ளுர் அதிகார அமைப்புகள் முறைசாரா கல்விக்கான திட்டங்கள் ஏற்பாடுகள் செய்தல்.

புதிய உதவி உபகரணங்கள் கற்பிக்க உபகரணங்கள் வடிவமைத்து உருவாக்க ஆய்வுகள்.

சட்டம் 1995 (பொருளடக்கம் எண்:4 வரை) (பகுதி - 2)

பதிவு எண்:டி.எல்.33004/96
பிரத்தியோக இந்திய அரசிதழ்.

பகுதி - 2, பிரிவு - 1.

அதிகாரபூர்வ வெளியீடு ----------------
எண்:1, புதுடில்லி, திங்கள் ஜனவரி 1,1996
பவுசா - 11                         1917
தனி தொகுப்பாக வைக்கும பொருட்டு இப்பகுதிக்கு தனித்தனி பக்கங்கள் தரப்பட்டுள்ளன.

சட்டம் நீதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம் (சட்டத்துறை)
1 ஜனவரி 1996 புதுடில்லி பவுசா - 11     1917(ச.க.)

சட்டம் 1995 (முன்னுரை)

வணக்கம்,

இந்தியாவில் மாற்றுத்திறனுடையோர்க்கான சட்டங்களை நாம் அறிந்துகொள்ளுவது மிகவும் பயனுள்ளதாகவும், அவசியமான ஒன்றாகவும் உள்ளது. கடந்த 1996ம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல்நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஊனமுற்ற நபர்கள்  (சமவாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம் 1995, மசோதாவினை தங்களுக்கு இந்த வலைத்தலம் மூலம் வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.  இம்மசோதா ஊனமுற்ற நபர்களின் (மாற்றுத்திறன் என்ற சொல் அப்போழுது வழக்கத்தில் இல்லாததாலும், அரசியல் சட்ட வார்த்தைகளை நமது விருப்பப்படி மாற்றுவது தவறானது என்பதாலும் இந்த இடுகை முழுக்க ஊனமுறு:றோர் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்) உரிமைகளை பாதுகாத்து நல்வாழ்வு  அளிப்பதில் நெடுந்தூரம் செல்லும் என்பதை மசோதாவின் பொருளடக்கத்தில் நீங்கள் பார்க்கலாம்.

ஊனமுற்றோர் நலத்துறை அலுவலகப் பெயர்கள் மாற்றம்

            ஊனமுற்றோர் என்ற பெயரில் இயங்கும் அலுவலகங்களின் பெயர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற புதிய பெயரில் மாற்றப்பட்டு இயங்கும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு  
         2007-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்து மேற்கொண்ட முடிவிற்கிணங்க, தமிழகத்தில் ஊனமுற்றோர் என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி மாற்றுத் திறனாளிகள் என அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து 2010 - 2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதல்-அமைச்சர் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.