இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
Showing posts with label அரசாணைகள். Show all posts
Showing posts with label அரசாணைகள். Show all posts

போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும் டிசம்பர் - 3 விடுப்பு

        கடந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளர்களுக்கு உலக மாற்றுத்திறனாளர் தினமான டிசம்பர்-3ம் தேதி மாநில அரசு மற்றுத் மாநில அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளர்களுக்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.       இந்த சலுகைகளை மற்ற அனைத்துத்துறையினரும் பெற்றுவந்துள்ள நிலையில்  போக்குவரத்துத்துறைக்கு மட்டும் வழங்கப்படவில்லை.  இதனை அறிந்த இன்றைய முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் போக்குவரத்துத்துறையிலிருக்கும் மாற்றுத்திறனாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் அவர்களுக்கும் டிசம்பர் - 3 அன்று சற்செயல் விடுப்பு வழங்கி ஆணையிட்டுள்ளார்.

மாற்றுத்திறனுடையோர்க்கு ஊர்திப்படி (Conveyance Allowance) உயர்வு

                   தமிழக அரசுத்துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனுடையோர்க்கான பயணப்படி எனப்படும் ஊர்திப்படியினை ரூபாய் 300லிருந்து ரூபாய் 1000மாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

அதற்கான அரசாணையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

கல்விக்கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் விலக்கு


                         கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பெரியார் ஈ.வி.ஆர் கல்லூரியிலிருந்து இரண்டாமாண்டு வணிகவியல் பயிலும் மாணவனிடமிருந்து என்னுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. 

                          அதே கல்லூரியில் சென்றவருடம் மாற்றுத் திறனுடையோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடத்தியது நமது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். (மற்றவர்கள் பின்னோக்கிய இடுகைகளை பார்க்கவும்). அந்த முகாம் மூலமாக நமது மக்களுக்கு அரசின் சட்டதிட்டங்கள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. மாணவமாணவியருக்கு கல்விக்கட்டணம் இரத்துசெய்யப்பட்டுள்ளது என்பதற்கான அரசாணையின் நகல் மற்றும் மற்றபிற மாணவர்கள் சம்மந்தப்பட்ட அரசாணையின் நகல்களும் அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கப்பட்டிருந்தது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு

               நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து அதற்கான நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை செயல்படுத்திட தற்போது முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

              பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்திடும் விதமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகளில் பயிலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே கல்விக் கட்டணத்தை ரத்துசெய்ததுடன், இந்த கல்வியாண்டு முதல் அவர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேணடிய தனிக் கட்டணத்தை ரத்து செய்தும், மாநில அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் எவ்விதத்திலும் தடையின்றிப் பெற்றுப் பயன் அடைவதற்கு உதவும் வகையில், நலத்திட்ட உதவிகளைப் பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்சவரம்பினை முற்றிலும் ரத்து செய்தும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

                   முதல்வரின் உத்தரவால் 22,685 மாற்றுத் திறனாளிகள் ஆண்டுக்கு 7.71 கோடி ரூபாய் அளவிற்கு பயன்பெறுவர் எனக் கூறப்படுகிறது.

இனி பேருந்திலும் பாதுகாவலருடன் பயணம் செய்யலாம்

மாற்றுத்திறனுடையோர் இரயில் பயணத்தின்போது எப்படி பாதுகாவலருடன் பயணம் செய்கின்றனரோ, அதனைப்போன்று இனி பேருந்திலும் பயணம் செய்யலாம் - என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. 

அந்த அறிவிப்பிற்கு தமிழக அரசு 30-05-2010 அன்றைய தேதியில் அரசாணை வழங்கியுள்ளது. 

அதன்படி ஒரு குறிப்பிட்ட விதிமுறைக்குட்பட்டு தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அவரவர் விருப்பம் போல பாதுகாவலருடனோ அல்லது தனித்தோ இனி பேருந்தில் பயணம் செய்யலாம்.

திரு.சுப.வீரபாண்டியன் ஐயா அவர்களின் உரை

                      மார்ச் 1 ஆம் தேதி காலை, கலைஞர் தொலைக்காட்சியில் ‘ஒன்றே சொல் நன்றே சொல்’ பகுதியில் மாற்றுத் திறனாளிகள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினேன். பேசி முடிந்த சில நிமிடங்களில், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடமிருந்து தொலைபேசி வந்தது. “இன்றைக்கு நல்ல செய்தி ஒன்றைச் சொல்லியிருக்கிறாய் . உன் பேச்சு என் மனதைத் தொட்டது. உடல் ஊனமுற்ற அந்த மக்களுக்குக் கண்டிப்பாக நல்லது செய்கிறேன்” என்று அவர் சொன்னபோது வியப்பிலிருந்து விடுபட எனக்கு ஒரு நிமிடமாயிற்று.