இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

ஊனமுற்றோருக்கான பெரிய திட்டத்தை நடைமுறை படுத்த நடவடிக்கை எடுப்போம்: கருணாநிதி

திருச்சி, மார்ச்.4-திருச்சியில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசுகையில், மாற்றுத் திறனாளிகளின் நன்மைக்காக ஐ.நா. மன்றத்திலே எல்லா நாடுகளும் ஒத்துக் கொண்டு ஒரு ஒப்பந்தமும் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்திலே கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இந்தியா முழுமையும் உள்ள ஊனமுற்றோருக்கு- அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒப்பந்தப்படி வசதி வாய்ப்புகள், அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றனவா என்றால் இல்லை. நான் அதைப்பற்றி இந்த ஆண்டு நம்முடைய நிதி அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட விருக்கின்ற நிதி நிலை அறிக்கையில் - மத்திய அரசு அன்றைக்கு செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றி -இந்தியாவிலே இருக்கின்ற ஊனமுற்றோருக்கெல்லாம் நன்மைகளைச் செய்ய வேண்டும், உரிமைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக இருக்கிறோம். தமிழ்நாடு அரசும் சேர்ந்து தான் இந்திய அரசோடு ஒத்துழைத்து அந்த இயலாதவர்களுக்கு மாற்றுத் திறனுடையோருக்கு வழங்கப்படுகின்ற காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற முறையில் தான் அதை நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். எனவே இப்போது ஏழையெளியோருக்கு குடிசைகளை மாற்றி வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை விட பெரிய திட்டம், இந்தத் திட்டம். இந்தத் திட்டம் நிறைவேறிக் கொண்டிருக்கும்போதே, அந்தத் திட்டமும் நடைமுறைக்கு வர இந்த அரசு ஆவன செய்யும் என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

நன்றி: மாலைமலர்
http://www.maalaimalar.com/2010/03/04040203/political.html

மாற்றுத் திறன் படைத்தோரின் உரிமையை நிலை நாட்டுவோம்: கருணாநிதி உறுதி

மாற்றுத் திறன் படைத்தோருக்கு அரசு சார்பில் வழங்குகின்ற உதவிகளுக்குப் பதிலாக அவர்கள் கோரும் உரிமையை நிலை நாட்ட வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
""மாற்றுத் திறன் படைத்தோரின் உரிமைகள் குறித்த சட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ஏற்று, கையெழுத்திட்ட நாடுகளில் ஏழாவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது.

அந்தச் சட்டத்தின் தொடர்பாக காட்டப்பட்டுள்ள ஊனமுற்றோர் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் இரண்டு விழுக்காடு எனவும், தமிழகத்தில் அவர்களின் எண்ணிக்கை 18 லட்சம் பேர் என்றும்

மாற்றுதிறன்

மாற்றுதிறன் மக்களின் மனதிடத்தினை வளுப்படுத்துவதர்க்காகவும் ஊனதைப்பற்றிய விழிப்புணர்வு பெறுவருவதர்க்கவும் இங்கே ஒருசில வீடியோ படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மற்ற அமைப்புகள் மூலமும் நண்பர்கள் மூலமும் பெறப்பட்டுள்ளன. இதனைப்போன்ற வீடியோக்கள் தங்கள் வசம் இருந்தால் மற்ற மாற்றுதிறன் மக்களின் நன்மை கருதி வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.



ஊனமுற்றோருக்கான உரிமைகளை பெற்றுத்தர நடவடிக்கை: கலைஞர் உறுதி

மாற்றுத்திறன் உடையோருக்கான சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தர தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசும் இதற்கு அனுகூலமான முடிவுகளை மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஊனமுற்றோருக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்: புகார்கள் குறித்து இயக்குநர் பதிலளிக்க உத்தரவு


மதுரை, பிப். 24: மத்திய அரசின் ஊனமுற்றோருக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தத் தடை கோரிய மனுவுக்கு, ஊனமுற்றோர் நல்வாழ்வுத் துறை இயக்குநர் 6 வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் தாக்கல் செய்த மனு:

21.01.2010 பாராட்டு விழாவில் தமிழக முதல்வரின் உரை

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பினால், நேற்று (21.01.10) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட' நன்றி பாராட்டும் விழாவில்' கலந்து கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, கல்விச் சேவையில், இடைநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றும் தகமை பெற்ற பார்வையற்றோர்களுக்கு பணிநியமனச் சான்றுகளை வழங்கினார்.
 மாற்றுத் திறனாளர்களால் உருவாக்கப்பட்ட 'மா' திரைப்படம்
மனிதர்களுக்கு எப்பவுமே கலையின் மீது ஒரு தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் பிறவியிலோ, விபத்திலோ மனிதர்களின் இயல்பு நிலையிலிருந்து மாறியவர்களான மாற்றுத் திறனாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களிடம் புதைந்துள்ள கலைத் தாகத்தைக் கண்டு அறிந்து, அவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சியளித்து, அவர்களின் மூலம் உருவாக்கப்பட்ட 'மா' திரைப்படத்தை தனது முதல் திரைப்படமாக தயாரித்திருக்கிறது 'கலைவிழி'.