இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்க செயல்பாடுகளின் அடுத்த முயற்சியாக மாற்றுதிறனுடையோருக்கு பெரிதும் உதவும் வகையிலும், அவர்களுக்கு வசதியாகவும், அவர்களின் வேலை பளுவை அதிகரிக்காத வகையிலும் அவர்கள் வசிக்கும் அந்தந்த பகுதிக்கே சென்று அவர்களை நேரில் சந்திக்கவும், அவர்களுக்கு அரசின் நல திட்டங்களை எடுத்துரைக்கவும் உரியவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற உதவுவதற்கும் மேலும் அவர்களின் குறைகளை கேட்டு உதவுவதற்கும் சங்கத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதனை நிறைவேற்றிடும் விதமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றிய அளவில் குழுக்களை அமைப்பது எனவும் அதற்கு ஒரு பொறுப்பாளரை நியமிப்பது எனவும் முடிவு

01/07/2009 உண்ணாவிரதத்தின் சாதனைகள்

01/07/2009 அன்று சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தின் விளைவாக நமது தமிழக அரசாங்கம் ஒருசில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றின் விவரங்களை சென்னை ஊனமுற்றோர் கூட்டமைப்பு அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது. அதன் நகல் உங்களின் பார்வைக்கு.

செய்தி நறுக்கு


தினமலர் நாளிதழில் வெளிவந்த ஒரு செய்தி நறுக்கு

உயர்கல்வி கற்கும் ஊனமுற்றோர்க்கு முழுமையான கட்டண விளக்கு அளிக்கும் அரசாணை







ஊனமுற்றோர்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மூன்று சதவிகித பணிஇடங்களில் ஊனமுற்றோர் நியமனம் செய்யபடுவதை கண்காணிக்க உயர்மட்டகுழு அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை







தொழில் பயிற்சி நிறுவனதிர்க்கான அரசாணை




பர்வையற்றவர்க்கு வழங்கப்படுவது போலவே அனைத்துவகை ஊனமுற்றவர்களுக்கும் வேலை வைப்பற்றோர் நிவரனத்தொகை வழங்குவதற்கான அரசாணை




பரத பிரதமரின் சுயவேளைவய்ப்புத்திட்டத்தில் ஐந்து சதவித பங்குத்தொகையை அரசே ஏற்றுக்கொல்வதர்க்கான அரசாணை




தனியார் தொழில்சாலைகளில் ஊனமுற்றோர்க்கு சலுகைக்கான அரசாணை




சட்ட கல்லுரிகளில் கட்டண சலுகைக்கான அரசாணை



திருச்சி மேயருடன் சந்திப்பு




திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கம் சார்பில் புதிதாக பதவி ஏற்றுள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மதிப்பிற்குரிய மேயர் திருமதி. சுஜாதா அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு செயலாளர் மரிக்கண்ணன் அவர்கள் தலைமையில் முருகானந்தம், வெங்கட்ராமன், காமராஜ், கண்ணன் மற்றும் சுபத்ரா ஆகியோர் மதிப்பிற்குரிய மேயர் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். மேலும் ஊனமுற்றோர்க்கு சுய தொழில் புரியும் வகையில் மாநகராட்சிக்கு வுட்பட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளை வழங்கக்கோரியும், சங்கத்திற்கு குறைந்த வாடகையில் இடம் வழங்க கோரியும் மனு கொடுக்கப்பட்டது. தாயுள்ளம் கொண்ட மதிப்பிற்குரிய மேயர் அவர்கள் எமது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதியளித்தார்கள்.

விழாவில் கலந்துகொண்டவர்களின் படங்கள் - 2
















விழாவில் கலந்துகொண்டவர்களின் படங்கள் - 1
















திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கத்தின் சார்பாக சென்னை உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டவர்களின் புகை படங்கள்
















உண்ணாவிரதத்தின் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள்




திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் உண்ணாவிரதத்திற்கு புறப்பட்டவர்களில் ஒரு பிரிவினர்