திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கம் சார்பில் புதிதாக பதவி ஏற்றுள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மதிப்பிற்குரிய மேயர் திருமதி. சுஜாதா அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு செயலாளர் மரிக்கண்ணன் அவர்கள் தலைமையில் முருகானந்தம், வெங்கட்ராமன், காமராஜ், கண்ணன் மற்றும் சுபத்ரா ஆகியோர் மதிப்பிற்குரிய மேயர் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். மேலும் ஊனமுற்றோர்க்கு சுய தொழில் புரியும் வகையில் மாநகராட்சிக்கு வுட்பட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளை வழங்கக்கோரியும், சங்கத்திற்கு குறைந்த வாடகையில் இடம் வழங்க கோரியும் மனு கொடுக்கப்பட்டது. தாயுள்ளம் கொண்ட மதிப்பிற்குரிய மேயர் அவர்கள் எமது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதியளித்தார்கள்.
No comments:
Post a Comment