தமிழகத்தில் வரும் ஜனவரி 10ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 7ஆம் தேதிகளில், 5 வயதுக்கு உட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.இந்தியாவில் போலியோ நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, உத்தரப் பிரதேசம், பீகார், டெல்லி, உத்தராஞ்சல், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் போலியோ என்னும் இளம்பிள்ளை வாதம் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 5 வருடமாக ஒரு குழந்தை கூட இந்நோயால் பாதிக்கப்படவில்லை.போலியோ இல்லாத நிலையை தக்க வைத்துக்கொள்ள ஆண்டுதோறும் முகாம்கள் நடத்தப்பட்டு
இதைப் படிங்க முதல்ல
நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
உடல் ஊனமுற்றோருக்கான ஏ.டி.எம்
உடல் ஊனமுற்றோர் எளிதில் இயக்கும் வகையிலான தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தை (ஏ.டி.எம்) பஞ்சாப் நேஷனல் வங்கி அமைத்துள்ளது. இந்த ஏ.டி.எம் புது டெல்லியில் சர்வதே உடல் ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு ஆக்சன் பார் எபிலிட்டி டெவலப்மென்ட் அண்ட் இன்குலூசன் அமைப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேர்மனும்- மேலாண்மை இயக்குநருமான கே.ஆர்.காமத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் காமத் பேசுகையில், நிறுவனங்களின் சமுதாய பொறுப்புணர்ச்சியின் ஒரு அங்கமாக, இந்த உடல் ஊனமுற்றோர் எளிதில் இயக்கும் ஏ.டி.எம் அமைத்துள்ளோம். இது மாதிரியான அதிக ஏ.டி.எம்களை இனி வருடம் வருடங்களில் நிறுவப்படும் என்று கூறினார். ஆனல் எத்தனை ஏ.டி.எம் இயந்திரங்கள் நிறுவப்படும் என்பதை தெரிவிக்கவில்லை. பயோமெட்ரிக் ஏ.டி.எம் என்று அழைக்கப்படும் இவற்றில் டெபிட் கார்களை பயன்படுத்தலாம். டெபிட் கார்டின் உரிமையாளர் சங்கேத எண்ணை அழுத்த வேண்டியதில்லை. அதற்கு பதிலாக விரல் ரேகை, கண்ணின் கருவிழி, முகம் ஆகியவற்றை அடையாளமாக பயன்படுத்தாலாம். இதனால் கண்பார்வை இல்லாதவர்கள் உட்பட உடல் ஊனமுற்றோர் ஏ.டி.எம் இயந்திரத்தை யாருடைய உதவியும் இல்லாமல் பயன்படுத்தம் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நன்றி:வெப்துனியா
http://tamil.webdunia.com/newsworld/finance/news/0912/04/1091204078_1.htm
நன்றி:வெப்துனியா
http://tamil.webdunia.com/newsworld/finance/news/0912/04/1091204078_1.htm
Labels:
மற்ற வலை பதிவுகள்
உலக ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 3
உலக ஊனமுற்றோர் தினமான டிசம்பர் 3 ஆம் தேதியினை திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சாங்கம், இந்திய பார்வையற்றோர் மேம்பாட்டு சங்கம் ஆகியவை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் இன்னும் பல மாற்றுத்திறனுடையோர் சார்ந்த சங்கங்கள் இணைந்து திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் எதிரில் காதிக்ராப்ட் மைதானத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி மாலை 3 மணிக்கு விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தியா சுதந்திரமடைந்து 62 ஆண்டுகள் ஆனபின்பும்
Labels:
கொண்டாட்டங்கள்
ஊனமுற்றோருக்கு சலுகையில்லை: தமிழக அரசு மீது விஜயகாந்த் குற்றச்சாற்று
மூன்று சக்கர வாகனம் கேட்டு விண்ணப்பித்த ஊனமுற்றவர்களில் 80 பேரில் நான்கு பேருக்கும், உதவி கேட்டு விண்ணப்பித்த மனவளர்ச்சி குன்றியவர்களில் 4 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேருக்குத்தான் உதவித்தொகை கிடைத்துள்ளது என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குற்றம் சாற்றியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல் ஊனமுற்றோர் நம்முடைய உடன் பிறந்த சகோதர, சகோதரிகளாக மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு இருக்கின்ற குறைகளை ஒவ்வொருவரும் தீர்க்கப் பாடுபட வேண்டும். அதற்காகவே டிசம்பர் 3ஆம் நாள் உலக ஊனமுற்றோர் தினமாக கொண்டாடப்படுகிறது.தே.மு.தி.க இதை உணர்ந்து அவர்களுக்கென உடல் ஊனமுற்றோர் நல அணி உருவாக்கியதோடு, கடந்த 27 ஆண்டுகளாக எனது பிறந்தநாளில் உடல் ஊனமுற்றோர்களுக்கு நலஉதவிகளைச் செய்து வருகிறேன். தமிழக அரசு ஊனமுற்றோருக்கு வாரியம் அமைத்தது. ஆனால் ஊனமுற்றோருக்கு முறையான சலுகைகள் போதிய அளவில் வழங்கப்படவில்லை. மாதந்தோறும் ரூ.500 உதவி வழங்குவதாக
Labels:
அறிவிப்புகள்,
மற்ற வலை பதிவுகள்,
விஜயகாந்த்
Subscribe to:
Posts (Atom)