இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

உலக ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 3

உலக ஊனமுற்றோர் தினமான டிசம்பர் 3 ஆம் தேதியினை திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சாங்கம், இந்திய பார்வையற்றோர் மேம்பாட்டு சங்கம் ஆகியவை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் இன்னும் பல மாற்றுத்திறனுடையோர் சார்ந்த சங்கங்கள் இணைந்து திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் எதிரில் காதிக்ராப்ட் மைதானத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி மாலை 3 மணிக்கு விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தியா சுதந்திரமடைந்து 62 ஆண்டுகள் ஆனபின்பும் ஊனமுற்றோரின் சமூக வாழ்வாதாரமான கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இன்றுவரைக்கும் கூட அவர்கள் சமூகத்திலும் குடும்பத்திலும் கூட இரண்டாம் தரக்குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். ஐ.நா. சபையில் ஊனமுற்றோருக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஆனால் இந்தியாவைப்பொறுத்தவரை ஒப்பந்தம் ஒப்புக்காகவே உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் பெரும்பான்மையாக இந்தியாவில் நடைமுறைப்படுதப்படவில்லை.
அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் ஊனமுற்றோர் உரிமை குறித்த தெளிவான பார்வை இல்லை. அதனால் ஊனமுற்றோருக்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் எல்லாம் நலத்திட்டங்களாகவே உள்ளன. அவர்களது உரிமைகளுக்கான திட்டங்களாக இல்லை. ஆகவே மத்திய/மாநில அரசின் பார்வையை ஊனமுற்றோரின் உரிமை சம்பந்தமாக திரும்பவும் போதுமக்களுக்கிடையே ஊனமுற்றோரின் உரிமையும், மனித உரிமையே என்ற சிந்தனையை உருவாக்கவும் உலக ஊனமுற்றோர் தினத்தன்று விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடத்திட மாற்றுத்திறனுடையோர் மீது அக்கறை கொண்ட பொதுமக்களும், அரசு ஊழியர்களும், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளும் கலந்துகொண்டு பேருதவிபுரிந்தனர்.

நிகழ்சியில் பங்குபெற்ற முக்கியஸ்தர்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் அமைப்பு செயலாளர் திரு R. சுப்பிரமணியன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தலைவர் திரு.R. முருகானந்தம், இந்திய பார்வையற்றோர் மேம்பாடு சங்கத்தினை சார்ந்த திரு.R. பாக்யராஜ் மற்றும் பூர்நோதையா தொண்டு நிறுவனத்தின் தலைவர் செல்வி.கலையரசி ஆகியோர் விழாவிற்கு தலைமைதாங்கினர்.
சிறப்பு விருந்தினராக நேரு யுவகேந்த்ராவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சுப்பிரமணியம் அவர்கள் கலந்துகொண்டார்.
இந்நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர்கள் திரு.S.மார்டின் மற்றும் திரு. சந்திரமோகன் ஆகியோரும் குளோபல் மனித உரிமைக் கழகத்தின் தலைவர் திரு. பாரதராஜா மற்றும் சமூகஆர்வலர் திரு.P.லெனின் ஆகியோரும் அழைக்கப்பட்டு கலந்துகொண்டனர்.
இந்திய பார்வையற்றோர் சங்கத்தை சார்ந்த திரு.M.கணேசன் மற்றும் திரு.N.D.மணியன் ஆகியோரும் காரைக்குடி அரசு கலைக்கல்லுரியை சார்ந்த பேராசிரியர் திரு.M.துரை , சமூக ஆர்வலர் மற்றும் வெற்றிக்கனி இதழ் ஆசிரியர் திரு. N.காளிதாஸ் மற்றும் திரு.V.ராஜா அண்ணாமலை ஆகியோர் பிரசார உரையாற்றினர்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முனேற்ற சங்கத்தின் செயலாளர் திரு.P.மாரிக்கண்ணன், வழக்கறிஞர் திரு.S.வின்சென்ட், மற்றும் காப்பாளர்கள் திரு.பாலகிருஷ்ணன், கிளமென்ட் மற்றும் காரைக்குடி அழகப்பா கல்லூரி பேராசிரியர் திரு.லூகாஷ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
திரு.மா.காமராஜ் அவர்கள் விழா எழுச்சியுரை வழங்கினர்.
திரு.M. வெங்கட்ராமன் அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.









1 comment:

  1. Dear sir,
    Its really good to see the photos taken at the programme.. congrats and I am really pleased by your efforts. May your efforts take you towards acheiving your vision

    With regards
    Arun , BHC

    ReplyDelete