இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

ஊனமு‌ற்றோரு‌க்கு சலுகை‌யி‌ல்லை: த‌மிழக அரசு ‌மீது ‌விஜயகா‌ந்‌த் கு‌ற்ற‌ச்சா‌ற்று

மூ‌ன்று ச‌க்கர வாகன‌ம் கே‌ட்டு ‌வி‌ண்ண‌ப்‌‌பி‌த்த ஊனமு‌ற்றவ‌ர்க‌ளி‌ல் 80 பே‌ரி‌‌ல் நா‌ன்கு பேரு‌‌க்கு‌ம், உதவி கேட்டு வி‌ண்‌ண‌ப்‌பி‌த்த மனவ‌ள‌ர்‌ச்‌சி கு‌‌ன்‌றிய‌வர்க‌ளி‌ல் 4 ஆ‌யிர‌ம் பே‌‌‌ரி‌ல் 2 ஆ‌யிர‌ம் பேரு‌க்கு‌த்தா‌ன் ‌உத‌வி‌த்தொகை கிடை‌த்து‌ள்ளது எ‌ன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கு‌ற்ற‌‌ம் சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.இது தொடர்பாக அவர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், உடல் ஊனமுற்றோர் நம்முடைய உடன் பிறந்த சகோதர, சகோதரிகளாக மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு இருக்கின்ற குறைகளை ஒவ்வொருவரும் தீர்க்கப் பாடுபட வேண்டும். அதற்காகவே டிசம்பர் 3ஆம் நாள் உலக ஊனமுற்றோர் தினமாக கொண்டாடப்படுகிறது.தே.மு.தி.க இதை உணர்ந்து அவர்களுக்கென உடல் ஊனமுற்றோர் நல அணி உருவாக்கியதோடு, கடந்த 27 ஆண்டுகளாக எனது பிறந்தநாளில் உடல் ஊனமுற்றோர்களுக்கு நலஉதவிகளைச் செய்து வருகிறேன். தமிழக அரசு ஊனமுற்றோருக்கு வாரியம் அமைத்தது. ஆனால் ஊனமுற்றோருக்கு முறையான சலுகைகள் போதிய அளவில் வழங்கப்படவில்லை. மாதந்தோறும் ரூ.500 உதவி வழங்குவதாக
அறிவித்தார்கள். இன்னும் இந்த சலுகை அவர்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை.வாரிய உறுப்பினர்களுக்கு எந்தவிதமான உரிமைகளோ, அதிகாரங்களோ இல்லையென்று சமூக நலத்துறை அமைச்சர் வாரியக் கூட்டத்தில் அறிவித்தார் என்று தெரிகிறது. இது வாரியம் என்ற பெயரில் ஊனமுற்ற மக்களை ஏமாற்றுகின்ற வேலையாகும். மேலை நாடுகளில் உடல் ஊனமுற்றோர்களுக்கு ஒவ்வொரு இடத்திலும் விசேஷ சலுகைகள் அளிக்கப்படுகிறது. அவர்கள் பயணம் செய்வதற்கு பிரத்தியோக வசதிகள் செய்யப்படுகின்றன.அரசு வெளியூர் பேருந்துகளில் ஊனமுற்றோருக்கு மட்டுமே சலுகை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. ஆனால் ஊனமுற்றோரை அழைத்து வரும் உதவியாளருக்கும் சலுகை வழங்க வேண்டும். இந்த சலுகை ஏற்கனவே மத்திய அரசால் இர‌யில்வே துறையில் வழங்கப்பட்டு வருகிறது.அது போன்று இரயில் பயணம் செய்யவிரும்பும் ஊனமுற்றோர் முன்பதிவு செய்து தான் பயணம் செய்ய வேண்டுமென மத்திய அரசு அறிவித்ததை வன்மையாக கண்டிக்கிறேன். ஊனமுற்றோருக்கான உதவித் தொகை 70 சதவிகிதம் பாதிப்பு இருந்தால்தான் தரப்படுகிறது. அது 50 சதவிகிதம் பாதிப்பு இருந்தாலே தரப்பட வேண்டும்.திருமண உதவித் தொகையான ரூ.20 ஆயிரத்தில், ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாக வழங்கப்படுவதால் இந்த உதவித் தொகையை பயன்படுத்த முடியாமல் போகிறது. அதற்கு பதிலாக உதவித்தொகை முழுவதுமே பண உதவியாக வழங்கப்பட வேண்டும்.சென்னை மாவட்டத்தில் 80 பேருக்கு ஊனமுற்றோர் மூ‌ன்று ச‌க்கர வாகன‌ம் வேண்டுமென மனு கொடுத்ததில் வெறும் நான்கு பேருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மனவளர்ச்சி குன்றிய 4000 பேர் உதவி கேட்டு மனு போட்டதில் 2000 பேருக்குத்தான் உதவி வழங்கப்பட்டுள்ளது. இது மனு செய்த அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் கோ‌‌ரி‌க்கை வை‌த்து‌ள்ளா‌ர்.
நன்றி:வெப்துனியா

No comments:

Post a Comment