இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

உடல் ஊனமுற்றோருக்கான ஏ.டி.எம்

உடல் ஊனமுற்றோர் எளிதில் இயக்கும் வகையிலான தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தை (ஏ.டி.எம்) பஞ்சாப் நேஷனல் வங்கி அமைத்துள்ளது. இந்த ஏ.டி.எம் புது டெல்லியில் சர்வதே உடல் ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு ஆக்சன் பார் எபிலிட்டி டெவலப்மென்ட் அண்ட் இன்குலூசன் அமைப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேர்மனும்- மேலாண்மை இயக்குநருமான கே.ஆர்.காமத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் காமத் பேசுகையில், நிறுவனங்களின் சமுதாய பொறுப்புணர்ச்சியின் ஒரு அங்கமாக, இந்த உடல் ஊனமுற்றோர் எளிதில் இயக்கும் ஏ.டி.எம் அமைத்துள்ளோம். இது மாதிரியான அதிக ஏ.டி.எம்களை இனி வருடம் வருடங்களில் நிறுவப்படும் என்று கூறினார். ஆனல் எத்தனை ஏ.டி.எம் இயந்திரங்கள் நிறுவப்படும் என்பதை தெரிவிக்கவில்லை. பயோமெட்ரிக் ஏ.டி.எம் என்று அழைக்கப்படும் இவற்றில் டெபிட் கார்களை பயன்படுத்தலாம். டெபிட் கார்டின் உரிமையாளர் சங்கேத எண்ணை அழுத்த வேண்டியதில்லை. அதற்கு பதிலாக விரல் ரேகை, கண்ணின் கருவிழி, முகம் ஆகியவற்றை அடையாளமாக பயன்படுத்தாலாம். இதனால் கண்பார்வை இல்லாதவர்கள் உட்பட உடல் ஊனமுற்றோர் ஏ.டி.எம் இயந்திரத்தை யாருடைய உதவியும் இல்லாமல் பயன்படுத்தம் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நன்றி:வெப்துனியா
http://tamil.webdunia.com/newsworld/finance/news/0912/04/1091204078_1.htm

No comments:

Post a Comment