இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

செந்தமிழும் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்புகளும்

                   "சாகும்போதும் தமிழ்படித்து சாகவேண்டும்
                    என் சாம்பல் தமிழ்மணந்து போகவேண்டும்"

                                            என்கிற பாவேந்தரின் வாக்கினைப் பின்பற்றி, தமிழின் தொண்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப்பண்பு, பண்பாட்டுக்கலையறிவு வெளிப்பாடு, பிற மொழித்தாக்கமில்லாத்தன்மை, குறைவற்ற இலக்கிய வளம், உயர் சிந்தனைகள், கலையிலக்கிய தனித்தன்மை, மொழிக்கோட்பாடுகள் போன்ற டசெம்மொழித்தகுதிகளைச் சிறப்பிக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் பலரும் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவருவதை வரலாறுகள் சொல்கின்றன.

நன்றி அறிவிப்பு பிரச்சாரம்

                    கடந்த 19.08.2008 அன்று தமிழ்நாடு ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளர்களும் ஒன்றினைந்து பதினோரம்சக் கோரிக்கைகளை வழியுறுத்தி ஊர்வலம் சென்றனர்.  அதனை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் அவர்கள் அதில் ஒன்பது கோரிக்கைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு அரசாணையும் வெளியிட்டார்.  அதுமுதல் தமிழக முதல்வர் அவர்கள் மாற்றுத்திறனுடையோர்க்காக பல திட்டங்களை அறிவித்துவருகிறார்.  

                     அதற்காக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நன்றிதெரிவிப்பதற்காகவும் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கோரியும் குமரிமுதல் கோட்டைவரை நன்றி அறிவிப்பு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

மாற்றுத்திறனுடையோர் மறுவாழ்வுத்துறை

LAB TECHNICIAN COURSES: (DMLT)
இரத்தப் பரிசோதகர் பயிற்சி:

             மேற்கண்ட இரண்டு வருட லேப் டெக்னீசியன் கோர்ஸ் இலவசமாக பயில விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 
கடைசித்தேதி : 13.09.2010
தகுதி                  : பனியிரண்டாம் வகுப்பு (அறிவியல்)
வயது வரம்பு  : 18 முதல் 30 வயது வரை
ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 
மாற்றுத்திறனாளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், இரண்டு மார்பளவு புகைப்படம், மற்றும் படித்ததற்கான சான்றிதல்களுடன் மாற்றுத்திறனுடையோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஏமாற்றும் ஏர்டெல் பேட்டரி கார்கள்

                     பல முக்கியமான இரயில் நிலையங்களில் தனியார் நிறுவனமான பார்திஏர்டெல் மூலமாக பேட்டரி மூலம் ஓடக்கூடிய அருமையான கார்கள் வலம்வந்துகொண்டிருக்கின்றன.  இது இந்த நிறுவனத்தின் விளம்பரத்திற்காகவும், சமூகசேவைக்காகவும் இருக்கலாம்.  எந்த வகையில் இருந்தாலும் அந்த முயற்சியினை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். ஏனென்றால் முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய ஒரு அருமையான திட்டமாகும். அதற்காகத்தான் அந்த நிறுவனத்தினை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் எனக் கூறினேன்.

                   இத்திட்டம் ஏர்டெல் நிறுவனத்தால் துவங்கப்பட்ட ஆரம்பக்காலத்தில் அனைவருக்கும் அருமையான சேவையை செய்தன இந்த பேட்டரி கார்கள்.  நாட்கள் செல்லச்செல்ல அரசாங்கத்தின் திட்டங்களைப்போன்றே இத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது.  காரணமாக இடையிடையே நடக்கும் சம்பவங்களைக் கூறினாலும் நேற்று சென்னையிலும் திருச்சியிலும் நடந்த சம்பவங்களைக் கூறலாம்.