இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

மாற்றுத்திறனுடையோர் மறுவாழ்வுத்துறை

LAB TECHNICIAN COURSES: (DMLT)
இரத்தப் பரிசோதகர் பயிற்சி:

             மேற்கண்ட இரண்டு வருட லேப் டெக்னீசியன் கோர்ஸ் இலவசமாக பயில விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 
கடைசித்தேதி : 13.09.2010
தகுதி                  : பனியிரண்டாம் வகுப்பு (அறிவியல்)
வயது வரம்பு  : 18 முதல் 30 வயது வரை
ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 
மாற்றுத்திறனாளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், இரண்டு மார்பளவு புகைப்படம், மற்றும் படித்ததற்கான சான்றிதல்களுடன் மாற்றுத்திறனுடையோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.



------------------------------------------------

கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்தல்
கடைசித் தேதி : 30.09.2010
              தமிழகத்தில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.  

வகுப்புகள்
 1 முதல் 5 வரை        = ரூ 500
6 முதல் 8 வரை         = ரூ1500
9 முதல் 12 வரை      = ரூ 2000
கல்லூரிகளில் இளங்கலை = ரூ.3000
முதுகலை                                    = ரூ 3500

                    என கல்வி உதவித்தொகை (வருடத்திற்கு) வழங்கப்படுகின்றன.  ஜாதிவாரி கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்தவர்கள் மாற்றுத்திறனுடையோர் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்க இயலாது.  

                     கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் 30.09.2010க்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.  

                       இணைக்க வேண்டியவை. படிப்பதற்க்கான சான்று, மாற்றுத்திறனாளர் அடையாள அட்டை. புகைப்படம், மற்றும் குடும்ப அட்டை சகிதம் விண்ணப்பிக்கலாம்.  வருமானச்சான்று தேவையில்லை. 
----------------------------------

MOTOR CYCLE:
மோட்டார் சைக்கில்:
              பேட்டரியால் இயங்கும் இலவச மோட்டார் சைக்கிள் வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்.  
தகுதிகள்         : இரண்டு கால்களும் செயலிழந்தவர்கள் கை நன்றாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
படிப்பவர்கள் படிப்பதற்கான சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பணிபுரிபவர்கள், பணிபுரியும் அலுவலகத்தில் சான்று பெற்று சமர்பிக்கவேண்டும்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மற்றும் மார்பலவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.  வருமானச்சான்று தேவையில்லை.

No comments:

Post a Comment