கடந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளர்களுக்கு உலக மாற்றுத்திறனாளர் தினமான டிசம்பர்-3ம் தேதி மாநில அரசு மற்றுத் மாநில அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளர்களுக்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த சலுகைகளை மற்ற அனைத்துத்துறையினரும் பெற்றுவந்துள்ள நிலையில் போக்குவரத்துத்துறைக்கு மட்டும் வழங்கப்படவில்லை. இதனை அறிந்த இன்றைய முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் போக்குவரத்துத்துறையிலிருக்கும் மாற்றுத்திறனாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் அவர்களுக்கும் டிசம்பர் - 3 அன்று சற்செயல் விடுப்பு வழங்கி ஆணையிட்டுள்ளார்.
இதைப் படிங்க முதல்ல
நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
No comments:
Post a Comment