இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

குறுந்தகடு வெளியீடு - மாற்றுத்திறனுடையோருக்காக.

மாற்றுத்திறனுடையோருக்காக பல்வேறு வகைகளில் பல உபயோகமான செயல்களைச் செய்துவரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் திரு. என். முரளிதரன் அவர்கள் தற்சமயம் முயற்சி செய்து வெற்றிபெற்றுள்ள வென்று காட்டியுள்ளதுதான் போட்டித் தேர்வுகளுக்காக பயின்றுவரும் மாற்றுத் திறனுடையோர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படக்கூடிய ஒலிவடிவிலான குறுந்தகடு. மாநில அரசு, மத்திய 
அரசு மற்றும் வங்கித்துறை போன்றவைகள் நடத்திவரும் வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுகளுக்கு படித்த பெருவாரியான மாற்றுத்திறனாளர்கள் போட்டியிடுகின்றனர்.  அப்படிப்பட்ட மாற்றுத்திறனாளர்கள் மற்ற சராசரி போட்டியாளர்களைப்போன்றே போட்டித்தேர்வு மையங்களுக்குச் சென்று அதற்கான கட்டணத்தொகையினை செழுத்தியே பயிலவேண்டிய நிலை இருந்துவந்தது.  இதனை உணர்ந்த அப்போதிருந்த திருச்சிராப்பள்ளி வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் திரு.ப.சுரேஸ்குமார் அவர்கள் தமது வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே தன்னார்வ பயிலும் வட்டத்தினை செயல்படுத்தினார். அதனைத் தொடர்ந்து வந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரும் இந்த முறையினைச் செம்மைப்படுத்தி பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக இலவச தன்னார்வ பயிலும் வட்டங்களை உருவாக்கினார். இதனை மேலும் செம்மைப்படுத்தவும் மாற்றுத்திறனாளர்களின் பயணச் சிரமத்தினைக் குறைக்கவும் எண்ணி ஒலிவடிவிலான குறுந்தகட்டினை தயார் செய்து வினியோகிப்பது எனவும் முடிவுசெய்து அந்த பணி மாற்றுத்திறனுடையோர்க்கான இளநிலை அலுவலர் திரு.அ.கலைச்செல்வன் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.  இரவுபகல் பாராது உழைத்த இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பல ஆயிரம் கேள்விபதில்கள் அடங்கிய ஒலி வடிவிலான குறுந்தகட்டினை செவ்வனே தயாரித்து முடித்தார்.  இதற்காக அவர் பல குறல் தானம் செய்வோர்களையும் தன்னார்வம் உள்ளவர்களையும் கண்டறிந்து பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட குறுந்தகட்டினை இன்று காலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ªüòÿ ºókîó¡ அவர்கள் வெளியிட்டார். திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.சியாமளா அவர்களும், திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் மற்றும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment