இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

அரசு போட்டித்தேர்வுகளுக்கான குறுந்தகடு வெளியீட்டு விழா

       அரசு போட்டித்தேர்வுகளை சந்திக்கும் மாற்றுத் திறனாளர்களின் வசதிக்காகவும் அவர்களின் சிரமத்தைக் குறைக்கும் விதமாகவும் UPSC, TNPSC போன்ற அரசுத் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாகவும் கற்பித்தலை எளிமைப்படுத்தக்கூடிய ஒலிவடிவ குறுந்தகடு ஒன்றினை திருச்சிராப்பள்ளி மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் திரு.அ.கலைச்செல்வன் அவர்கள்   அதன் வெளியீட்டு விழா வரும் 26.07.2011 அன்று காலை பதினோரு மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரின் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

No comments:

Post a Comment