இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

மாற்று திறனாளிகள் நலவாரிய குழு திருத்தி அமைப்பு

மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் மற்றும் அதன் அலுவல்சாரா உறுப்பினர்களின் மூன்றாண்டு பதவிக்காலம் முடிவடை‌ந்ததையொ‌ட்டு இவ்வாரியத்தின் உறுப்பினர்கள் குழுவை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி திருத்தியமைத்து‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌‌க்கு‌றி‌ப்‌பி‌ல், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களுடைய முன்னேற்றத்தில் சிறப்புக்கவனம் செலுத்துவதற்காக தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறையிலிருந்து பிரித்து, தமது நேரடி கண்காணிப்பில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என்னும் ஒரு புதிய துறையை உருவாக்கியுள்ள முதலமைச்சர் கருணாநிதி அத்துறைக்கு ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியைச் செயலாளராகவும் நியமனம் செய்துள்ளார்.

முதலமைச்சர் கருணாநிதி மாற்றுத் திறனாளிகளிடம் கொண்டுள்ள அளவற்ற அன்பும் கருணையும் காரணமாக, அவர்களுக்கு முழுமையான சமூகப் பாதுகாப்பை அளிக்கும் வகையில், அவர்களுக்கெனத்தனி நல வாரியம் ஒன்றினை 24.4.2007 அன்று ஏற்படுத்தி, அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங் களின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக உதவித் தொகைகள் வழங்கி வருகிறார்.

இந்த மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் மற்றும் அதன் அலுவல்சாரா உறுப்பினர்களின் மூன்றாண்டு பதவிக்காலம் 23.4.2010 அன்று முடிவடைவதால், தமிழக முதலமைச்சர் தலைமையில் இவ்வாரியத்தின் உறுப்பினர்கள் குழுவைத் திருத்தியமைத்து முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.

அத‌ன்படி முதலமைச்சரின் தலைமயிலான தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் சமூக நலத்துறை அமைச்சர் அதன் துணைத்தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி ஆலோசகராகவும், அரசு நிதித்துறை முதன்மைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசுச் செயலாளர் ஆகியோர் அலுவல்சார் உறுப்பினர்களாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் உறுப்பினர் செயலாளராகவும் இருப்பார்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளாக கெவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே. ரங்கநாதன், எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் எம்.பி. நிர்மல், எபிலிட்டி பவுண்டேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த ரேவதி என்ற ஆஷாமேனன், லாரன்ஸ் அறக்கட்டளையைச் சேர்ந்த லாரன்ஸ் ராகவேந்திரா ஆகியோருடன் கமீலா நாசர்,

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பிரதிநிதிகளாக பார்வையற்றோருக்கான இந்திய சங்கத்தின் நிறுவனர் எஸ்.எம்.ஏ. ஜின்னா, தி.மு.க. பார்வையற்றோர் நற்பணி மன்றச் செயலாளர் நா. கருணாநிதி ஆகியோருடன் எம்.சி. கோமகன், செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான பிரதிநிதிகளாக சிறுமலர் காதுகேளாதோருக்கான பள்ளியைச் சேர்ந்த டாக்டர் சகோதரி ரீட்டாமேரி,

பால வித்யாலயா செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கான மையத்தின் கவுரவ இயக்குநர் சரஸ்வதி நாராயண சாமி, தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலர் சிம்ம சந்திரன், துணைத்தலைவர் தீபக் ஆகியோருடன் சென்னை ரெ.தங்கம், கி.கோபிநாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான பிரதிநிதியாக ஆயக்குடி அமர்சேவா சங்கத்தைச் சேர்ந்த எஸ். ராமகிருஷ் ணன். மனநோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதியாக மதுரை டாக்டர் சி.ராமசுப்பிரமணியம் ஆகியோர் தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினர்களாகவும் அவர்கள் பொறுப்பேற்கும் நாள் முதல் மூன்று ஆண்டு காலத்திற்குச் செயல்படுவார்கள் எ‌ன்று தெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

No comments:

Post a Comment