இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

மாபெரும் ஆர்பாட்டம்

தமிழகத்தில் பதினாறு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனுடையோர்கள் வாழ்ந்துவருகின்றார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் சமூகம், பொருளாதாரம், இடபெயர்ச்சிபோன்றவற்றில் பின்தங்கிய நிலையிலும், அனைத்து நிலையிலும் மற்ற சாதாரண மக்களுடன் போட்டி போட முடியாத நிலையில் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையில் வாழ்ந்துவருகின்றனர் என்பது அனைத்து தரப்பினரும் தயங்காமல் ஏற்றுக்கொள்ளும் ஒரு உண்மை.
மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் ரயில்வே துறையில் மாற்றுத்திறனுடையவர்கள் எளிதில் பயணம் செய்ய அவர்களுக்கென்று தனியாக எட்டு பேர் மட்டுமே அமரக்கூடிய
வகையில் ரயில்பெட்டி கொடுக்கப்பட்டிருந்தது. அதில் அனைத்து வகை மாற்றுத்திறனாளர்களும் அதிக கூட்டமான சமையங்களில் கூட தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில் இருபதுக்கும் மேற்பட்ட நபர்கள் கூட பயணம் செய்ய ஏதுவாக இருந்தது.
ஆனால் கடந்த 01.08.2009 முதல் அந்த தனிபெட்டியில் சாதாரண பயண சீட்டு பெற்ற மாற்றுத்திறனாளர்கள் பயணம் இயலாது எனவும் முன்பதிவுசெய்த இரண்டு மாற்றுத்திறனாளர்கள் மற்றும் இரண்டு உதவியாளர்கள் ஆகமொத்தம் நான்கு நபர்கள் மட்டுமே பயணம் செய்யமுடியும் என ஆணையிடப்பட்டுள்ளது.
ரயில்வே துறையின் இந்த ஆணை மாற்றுத்திறனாளர்கள் மத்தியில் பெரும் பாதிப்பினையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு இந்த ஆணை வெளியிட்டிருபத்தின் மூலம் மாற்றுத்திறனாளர்கள், சமூகத்தில் தடையின்றி வாழ வகைசெய்யும் கடமையிலிருந்து விலகி மாற்றுத்திறனாளர்களை பாகுபடுத்தி, தடைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆகா இவை மாற்றுத்திறனாளர்களுக்கு எதிரான உரிமை மீரல் என்பதனை உணர்வோடு தெரிவித்துகொள்கிறோம்.
மாற்றுத்திறனாளர்கள் எளிமையாகவும், உடனடியாகவும் பயணம் செய்யும்பொழுதும் அவர்களுக்கான தனிப்பெட்டி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனை உணரதவறிய ரயில்வே நிர்வாகத்திற்கு மாற்றுத்திறனாளர்களின் உணர்வினை உணர்த்தும் விதமாக அனைத்துவகை மாற்றுத்திறனாளர்களும் கடந்த 01.09.2009 அன்று திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் முன்பு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த அனைத்துவகை மாற்றுத்திறனாளர்களும், அனைத்து மாற்றுத்திறனாளர்கள் சம்பந்தப்பட்ட சங்கங்களும் திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முனேற்ற சங்கத்துடன் இணைந்து ஆர்பாட்டத்தில் பெருந்திறலாக உணர்வுடன் பங்கேற்றனர்.

2 comments:

  1. ஐயா , தங்களுக்கு ஒரு விண்ணப்பம் :

    அதாவது ஐயா, எல்லா அரசு & தனியார் அலுவலகத்திலும் குறிப்பிட்ட துறைக்கு அத்துறைக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களையே நியமிக்கிறார்கள். எனென்றால் அவர்களால் தான் அதைப்பற்றி முழுமையாக ஆய்ந்தறிந்து செயல்பட முடியும். ஆனால் மாற்றுதிறனுடயோர் அலுவலகத்தில் மட்டும் அவ்வாறான நிலை இல்லை; இதனால் மாற்றுதிறனுடயோர் அலைக்கழிக்க படுகிறார்கள், பல வழிகளில் சிரமப்படுகிறார்கள். தமிழகத்தில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனுடையோர்கள் வாழ்ந்துவருகின்றார்கள். தனியார் துறையிலும் சுய தொழிலிலும் பல மாற்றுத்திறனுடையோர்கள் பணிசெய்து வருகிறார்கள், அவர்களுக்கு மாற்றுதிறனுடயோர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதால் மாற்றுதிறனுடயோர் பொருளாதார நிலை உயர்வதோடு மாற்றுதிறனுடயோர் கஷ்டங்களை புரிந்து கொண்டு பணிசெய்ய வாய்ப்பாக இருக்கும்.

    நன்றி
    சிவ சங்கர்.

    ReplyDelete
  2. தங்களின் கருத்து நூறு சதவிதம் சரியானது. சரியாக சிந்தித்து திறமையாக செயல்படும் அரசியல்வாதிகளும் அதற்கு துணையாக அதிகாரிகளும் செயல்பட்டால் மட்டுமே இந்த துறை மட்டுமல்லாது அனைத்து துறைகளும் சரியாக செயல்படும். ஆனால் நாட்டில் நடப்பதே வேறு. பணம் கொடுத்தால்தான் அரசு வேலைக்கு வரமுடியும் என்ற மிகவும் கேவலமான நிலை நாட்டில் இருக்கும் வரை தங்கள் நினைப்பது நடக்காது. ஏனென்றால் பணம் கொடுத்து வேலை வாங்கும் நிலையில் பெரும்பாலான மாற்றுத்திறனாளர்களின் நிலை இல்லை. தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து எங்களோடு தொடர்பில் இருங்கள். முடிந்தால் தங்களது மின்னஞ்சல் முகவரியை எங்களுக்கு அனுப்புங்கள். நன்றிகள் பல.

    ReplyDelete