இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

நண்பர்களுக்கு அழைப்பு

நண்பர்களே இது நம்மைப்போன்ற ஒரு உடல் ஊனமுற்ற நபர் புரிந்த சாதனைகளை விளக்கவும் அது நம் அனைவருக்கும் ஒரு உந்துசக்கதியாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இங்கே பதிவுசெய்கின்றேன்.
சினிமாத் துறையில் வாய்ப்பு கிடைப்பதென்பது இன்றிய நிலையில் ஒரு குதிரைக்கொம்பான விசையமாகத்தான் நம் நாட்டில் இருந்து வருகிறது. அதுவும் கதாநாயகன் என்றால் சொல்லவே தேவையில்லை, வாய்ப்புக் கிடைப்பது என்பது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கே
தெரியும், அப்படி இருக்க காலத்தின் சூழ்நிலையால் குறைபாடுகளுடன் பிறந்துவிட்டவர்களின் நிலை இன்னும் சிரமம்தான் இருப்பினும் தனக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து துவண்டுவிடாமல் துணிவுடன் முயன்று வெற்றிபெற்றவர்களும் சிலர் உள்ளனர். உதாரணமாக தமிழகத்தை சேர்ந்த நடிகர் குட்டி என்பவர் தனது ஒரு காலையே இழந்தவர் இருப்பெனும் தனது விடமுயர்த்சியால் நடனம் கற்றுக்கொண்டார். அதன் விளைவாக "டான்சர்" என்ற தமிழ் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் சிறப்பாக நடித்திருந்தார்.
இவரை தொடர்ந்து தற்பொழுது கலமிறங்கியிருகிறார் கான்பூரை சேர்ந்த நசிர்கான். தான் பிறந்து சில ஆண்டுகளில் கண்பார்வையை முற்றிலும் இழந்துவிட்ட இவர் திரைப்படத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆவலுடன் மும்பையை நோக்கி வந்தார். சில ஆண்டுகள் பல தெரைப்பட நிறுவனங்களுக்கு சென்று வாய்ப்பு கேட்டார். இருப்பினும் யாரும் இவருக்கு வாய்ப்பு அளிக்க முன்வரவில்லை. விடாமுயற்சியின் முன்னுதாரணமான நசிர்கான் அவரே ரூபாய் 30 கோடி செலவில் "சேடோ" என்ற ஹிந்தி படத்தை இயக்கியத்துடன் தானே அதில் கதாநாயகனாக (இரு வேடங்களில்) நடித்துள்ளார். அவருடன் ஹிந்தி திரைப்பட முன்னனிகளான லிவிங்க்ஸ்டன், சோனாலி குல்கர்னி போன்றவர்கள் நடித்துள்ளபோதும் இந்த படத்தை வாங்க திரைப்பட விநியோகிஸ்தர்கள் முன்வரவில்லை. இந்த நிலையையும் சமாளித்த நசிர்கான் பட விநியோகத்திலும் தானே இறங்கிவிட்டார்.
இந்த சாதனையாளரை பாராட்டுவதுடன் இத்திரைப்படத்தை நாம் அனைவரும் திரையரங்கிற்கு சென்று திரைப்படத்தை கண்டு ரசிப்பதுடன் நசிர்கான் போன்ற சாதனையாளர்களுக்கு ஊக்கம் அளிப்போம் என இந்த இணையதளம் மூலம் நண்பர்களே உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

இப்படிக்கு
R. பாக்கியராஜ்
திரு R. பாக்கியராஜ் பற்றிய விவரக்குறிப்பு
பெயர் : இரா. பாக்கியராஜ்
கல்வித்தகுதி : இளங்கலை வரலாறு
வயது : 25
பெற்றோர் : P. ராஜு, R. அன்புச்செல்வி
முகவரி : கொடியாலம், திருச்சி.

பிற விவரங்கள்:
இளமையிலேயே கண் பார்வை குறைபாடு உடைய நான் பள்ளிக் கல்வியை திருச்சி தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்தேன். பிறகு I.T.I புக் பைண்டிங் பிரிவில் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வரும் அரசு கிளை அச்சகம் திருச்சி-15 ல் புக் பைண்டிங் பிரிவில் சேர்ந்து பணியாற்றி வருகின்றேன்.
ஆர்வம்:
நாட்டு நடப்புகளை அறிந்துகொள்வதும் அது சார்ந்த தகவல்களை சேகரிப்பதும் எனக்கு பிடித்தமான ஒரு செயலாகும். தமிழ் இலக்கிய, உரைநடை, ஒலி நாடகங்களை கேட்பதும் ஊனமுற்ற சிலருக்கு இந்திய பார்வையற்றோர் மேம்பாட்டு சங்கம் என்ற அமைப்பில் இணைந்து என்னால் முடிந்த உதவிகளை செய்வதும் எனது கடமையாக செய்து வருகின்றேன். நான் இந்த அளவிற்கு தமிழ் மீதும் நம் நாட்டு மக்கள் மீதும் அக்கறையுடன் நடந்து கொள்ள என்னை துண்டியவர் எனது மரியாதைக்குரிய நண்பர் திரு மணியன் அவர்களாவர். மொழிப்பற்று, நாட்டுப்பற்று உடன் நாம் இருக்கவேண்டும் நம்மால் முடிந்ததை ஊனமுற்றோற்கும் மற்றவர்க்கும் செய்யவேண்டும் என்று கூறியதுடன் தானும் அவரே வாழ்ந்து வருகின்றார். அவரை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட்டு வருகின்றேன்.
வாழ்க பாரதம்.

1 comment:

  1. பாக்கியராஜ் avargalukku vazhthukkalai therivaikkavum.. nantri -SivaSankar-

    ReplyDelete