இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

சுயம்வரம்

ஒருசில ஊனமுற்றோர்களின் வாழ்க்கையில் திருமணம் என்பது கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு நிகழ்வாகவே உள்ளது. அதனைப்போக்கும் விதமாகவும், ஊனமுற்றோர் வாழ்வில் திருமணம் என்பது கட்டாயமாக நடைபெறவேண்டும் என்பதனையும் கருத்தில் கொண்டு
தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சென்னையில் உள்ள ஆண்வென்ட் டிசைன் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உடல் ஊனமுற்றோர்க்கான "சுயம்வரம்" என்ற உன்னத நிகழ்ச்சியினை வருகின்ற 10.10.2009 அன்று சென்னையில் நடத்தவிருக்கின்றது. இதில் திருமணமாகாத ஆண், பெண் உடல் ஊனமுற்றவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கு தங்களின் முழு அளவிலான வண்ண புகைப்படம், ஜாதகத்தின் நகல் மற்றும் சுயவிளக்க குறிப்பு (பயோடேட்ட) ஆகியவற்றுடன் 25.09.2009க்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கத்தில் கிடைக்கும் விண்ணப்பப்படிவத்தையும் பூர்த்திசெய்து சமர்ப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 98650-75501 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

3 comments:

  1. ஐயா, திருமணம் என்பது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. கடைசி வரைக்கும் வாழ்க்கை துணை தேவைப்படுகிறது. மாற்றுதிறனுடையோருக்கு இது அவசியம் தேவையாகிறது. மேலும் மாற்றுதிறனுடையோரை மாற்றுதிறனுடையோரே மணபதால் physical - லாக பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதை தவிர்க்க இது போன்ற முயற்சிகளின் வழியாக ஒரு தொலை நோக்கு சிந்தனை வளரும் என்பதில் ஐயமில்லை. தங்கள் பணி சிறக்க....


    சிறிய விண்ணப்பம் தற்போது தங்கள் வலைப்பூவில் ஊனமுற்றோர் என்றே பதிவாகிறது தயவு கூர்ந்து மாற்றுதிறனுடையோர் என்று இடுகை இடவும் ..

    நன்றி சிவ சங்கர் ..

    ReplyDelete
  2. நன்றி நண்பரே தங்களது ஆக்கப்பூர்வமான அறிவுரைகள் கனிவுடன் ஏற்றுக்கொள்ளப்படும். நன்றிகள் பல

    ReplyDelete