இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

அரசு வேலை

              திருச்சிராப்பள்ளி மாவட்ட பொது விநியோக திட்டம் கூட்டுறவு  சங்கத்தின் துணைப் பதிவாளரால் அறிவிக்கப்பட்ட மாதம் ரூபாய் 3000ம் தொகுப்பூதியம் கொண்ட 171 விற்பனையாளர் பணியிடங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரை செய்யப்படவுள்ளது. 

கல்விக்கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் விலக்கு


                         கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பெரியார் ஈ.வி.ஆர் கல்லூரியிலிருந்து இரண்டாமாண்டு வணிகவியல் பயிலும் மாணவனிடமிருந்து என்னுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. 

                          அதே கல்லூரியில் சென்றவருடம் மாற்றுத் திறனுடையோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடத்தியது நமது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். (மற்றவர்கள் பின்னோக்கிய இடுகைகளை பார்க்கவும்). அந்த முகாம் மூலமாக நமது மக்களுக்கு அரசின் சட்டதிட்டங்கள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. மாணவமாணவியருக்கு கல்விக்கட்டணம் இரத்துசெய்யப்பட்டுள்ளது என்பதற்கான அரசாணையின் நகல் மற்றும் மற்றபிற மாணவர்கள் சம்மந்தப்பட்ட அரசாணையின் நகல்களும் அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கப்பட்டிருந்தது.

அதிகாரி முருகன் ஐ.ஏ.எஸ்(!) - சிந்தனையில் ஊனம்

                        பார்ப்பனிய நஞ்சைச் சுமந்து வரும் வார ஏடு துக்ளக்கில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.(!) அதிகாரி முருகன் என்பவர் மாற்றுத்திறனாளிகள் மீது பாய்ந்து கடித்திருக்கிறார். 30.06.2010 துக்ளக்கில் “உடல் ஊனமுற்றவர்களுக்குச் சலுகை அளிப்பது என்பது வேறு, அவர்களுக்கு அரசு வேலை அளித்து நிர்வாகத்தைச் சீர்குலைப்பது வேறு என்பதைத் தமிழக முதல்வர் உணரவேண்டும் ” என்று எழுதியிருக்கிறார். இதைக் கண்டித்துப் பார்வை யற்றோர் அமைப்புகளின் சார்பாக அனுப்பப்பட்ட கடிதமும் அடுத்த (14.7.2010) துக்ளக் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனுடையோர்க்கு சுயதொழில் விழிப்புணர்வு மற்றும் வேலை வாய்ப்பு முகாம்

                   திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் ஆகியவை திருச்சிராப்பள்ளி மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளர்களுக்கான சுயதொழில் விழிப்புணர்வு முகாம் மற்றும் வேலை வாய்ப்பு முகாமினை திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு நடத்தவிருக்கின்றது.

மாற்றுத்திறனாளர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் மற்றும் சீருடை வழங்கும் விழா

            திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் மற்றும் நேயம் அறக்கட்டளை இணைந்து மாற்றுத்திறனுடைய மாணவ மாணவியர் மற்றும் மாற்றுத் திறனுடையோரின் குழந்தைகளுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கும் விழா இன்று காலை திருச்சி, மரக்கடை, சையது முர்துசா பள்ளியில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பயனடைந்தனர்.

            இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளிமாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் திரு.பி. மாரிக்கண்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.