இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

மாற்றுத்திறனுடையோர்க்கு சுயதொழில் விழிப்புணர்வு மற்றும் வேலை வாய்ப்பு முகாம்

                   திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் ஆகியவை திருச்சிராப்பள்ளி மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளர்களுக்கான சுயதொழில் விழிப்புணர்வு முகாம் மற்றும் வேலை வாய்ப்பு முகாமினை திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு நடத்தவிருக்கின்றது.


               இந்த முகாமில் சுயதொழில் துவங்க ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட தொழில் மையத்தின் மேலாளர் உயர்திரு. கந்தசாமி அவர்கள் சுயதொழில் துவங்குவது, அதற்கான பயிற்சியளித்தல், தொழில் துவங்குவதற்கு மூலதனம் பெறுவது போன்றவற்றைப்பற்றிய தெளிவான விளக்கவுரையாற்றவுள்ளார். மேலும் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளர்களுக்கு தனியார் துறையைச் சார்ந்த தொழிலதிபர்கள் வாய்ப்பளிக்கவுள்ளார்கள். எனவே திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மாற்றுத்திறனாளர்கள் பெருந்திறளாக கலந்துகொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

                 விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர் மற்றும் கைபேசி எண்ணினை திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கத்தின் செயலாளர், வெங்கட் ராமன் அவர்களை 9944459809 என்ற  செல்பேசி எண்ணிற்கு தொடர்புகொண்டோ அல்லது  இந்த பதிவின் பின்னூட்டத்திலோ (commends) பதிவுசெய்துகொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment