கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பெரியார் ஈ.வி.ஆர் கல்லூரியிலிருந்து இரண்டாமாண்டு வணிகவியல் பயிலும் மாணவனிடமிருந்து என்னுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதே கல்லூரியில் சென்றவருடம் மாற்றுத் திறனுடையோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடத்தியது நமது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். (மற்றவர்கள் பின்னோக்கிய இடுகைகளை பார்க்கவும்). அந்த முகாம் மூலமாக நமது மக்களுக்கு அரசின் சட்டதிட்டங்கள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. மாணவமாணவியருக்கு கல்விக்கட்டணம் இரத்துசெய்யப்பட்டுள்ளது என்பதற்கான அரசாணையின் நகல் மற்றும் மற்றபிற மாணவர்கள் சம்மந்தப்பட்ட அரசாணையின் நகல்களும் அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கப்பட்டிருந்தது.
மாணவனிடமிருந்து வந்த அழைப்பில் சென்ற வருடம் வெளிவந்த மாற்றுத்திறன் மாணவ மாணவியர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்த அரசாணையையும் பின்பற்றவில்லை இந்த வருடம் 28.06.2010ம் ஆண்டு வெளிவந்த அரசாணையான கல்விக்கட்டணம் மற்றும் சிறப்புக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட அரசாணையும் பின்பற்றப்படவில்லையென்றும் தெரியவந்தது.
நான் நேரில் சென்று நமது விழிப்புணர்வு முகாம் நடத்திய ஒருங்கிணைப்பாளர்களிடம் விசாரித்தபொழுது ஒரு பார்வையற்ற மாணவிக்கும் இதே பிரச்சனை வந்தது என்றும் நாங்கள் வழங்கியிருந்த அரசாணையின் நகல் ஒன்றினை அந்த மாணவியின் மூலமாக கல்லூரி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டதாகவும், அதனால் அந்த மாணவிக்கு கல்விக்கட்டணத்திலிருந்து மட்டும் விலக்கு அளிக்கப்பட்டதாகவும் விவரம் தெரியவந்தது.
உண்மை நிலவரம் அறிய கல்லூரி அலுவலகத்தினை நாடினேன். அவர்கள் தங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையிலிருந்து எந்த விதமான சுற்றறிக்கையும் வரவில்லையெனவும் நமது சங்கத்தின் மூலமாக வழங்கப்பட்ட புதிய அரசாணையை வழங்கியதால் அந்த மாணவனுக்கு கல்விக்கட்டத்திலிருந்து மட்டும் விலக்கு அளிப்பதாகவும் விளக்கமளித்தனர்.
அரசு அலுவலகங்களில் என்ன நடக்கிறது?. கடந்த வருடம் வெளிவந்த அரசாணையே இன்னும் சம்மந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லையெனும்பொழுது மாற்றுத்திறனாளர் சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் என்ன செய்கின்றன?. அரும்பாடுபட்டு பெறப்படும் அரசாணைகள் உரியமுறையில் அமல்படுத்தப்படுகின்றனவா? என ஆய்வு செய்வது அவர்களது கடமையள்ளவா!. இரண்டாண்டுகள் ஆன நிலையிலும் அரசாணை நிறைவேற்றப்படாதது, சம்மந்தப்பட்ட மாற்றுத்திறனாளர்களுக்கு பயன்படாவன்னம் தாமதப்படுத்தப்படுவது அரசின் செயல்பாடுகளை நிறைவேற்றவிடாமல் தடுப்பதற்குச் சமமல்லவா?.
இதே நிலையில் தான் உள்ளன அரசின் பல்வேறு திட்டங்களும் குறிப்பாக போக்குவரத்துத்துறை, மாற்றுத்திறனாளர்களுக்கு 25 சதவீத சலுகையில் பயணம் செய்யலாம் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசு அறிவித்தபின்னரும் பேருந்து பயணத்தின் பொழுது மாற்றுத்திறனாளர்கள் இன்றுவரை சொல்லனா துயரங்களை அனுபவித்துவருகின்றனர்.
ஒரு சான்று, நமது சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் மணப்பாறை டெப்போவைச் சார்ந்த பேருந்தில் பயணிக்க நேர்ந்தது. நடத்துனர் சலுவையில் பயணச்சீட்டை வழங்க மருத்துவிட்டார். அதற்கு அவரல் கூறப்பட்ட காரணம் அவரது துறைச் சம்மந்தமில்லாதது என்பது வெட்கக் கேடான விசயம்.
மாற்றுத்திறனாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும் மற்ற சலுகைகளை வழங்கவும் மாவட்ட மாற்றுத்திறனாளர் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அடையாள அட்டை எப்படி வழங்குவது?, யார் யாருக்கு வழங்குவது?, அதில் எப்படியான புகைப்படம் ஒட்ட வேண்டும் என்பது சம்மந்தப்பட்ட அலுவலருக்கு நன்றாகவே தெரியும். அதில் தவறு நெரும்பொழுது சம்மந்தப்பட்ட அதிகாரி கையொப்பமிடமாட்டார். அல்லது அதனை சரிசெய்தே அடையாள அட்டை வழங்குவார். இப்படியிருக்கும் பொழுது...
அந்த நடத்துனர் நமது உறுப்பினரின் அடையாள அட்டையில் முழுஅளவிலாள ஊனம் தெரியும்படியான புகைப்படம் ஒட்டப்படவில்லை அதனால் அவருக்கு சலுகைக்கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கமுடியாது என மறுத்துள்ளார். போக்குவரத்துத்துறையைப் பொருத்தவரை ஒவ்வொரு டெப்போவிற்கும் தனித்தனிச் சட்டம், தனித்தனி அரசாங்கம் போலுள்ளது வருந்தத்தக்க விசயமே.

No comments:
Post a Comment