இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

ரயில்வே நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு


கடந்த 28.08.2009 அன்று ஊனமுற்றோர் சங்கங்களின் சார்பில் சென்னையில் ஊனமுற்றோர்க்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அன்று மட்டும் குறைந்தபட்சம் 2000 ஊனமுற்றவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்து முகாமில் கலந்துகொண்டனர்.
அந்த வேலைவாய்ப்பு முகாமில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து நானும் சென்றிருந்தேன்முகாமினை முடித்துக்கொண்டு மீண்டும்

24.08.2009 தேதிய செய்தி நறுக்கு - தினமலர் நாளிதழ்

இந்த செய்தி நறுக்கினை படித்து உங்களின் கருத்தினை கண்டிப்பாக கூறவும். நன்றி.

ரயில்வே துறையினரின் செயலை கண்டித்து 01/09/2009 அன்று போராட்டம்

வரும் 01/09/2009 அன்று ஊனமுற்றோர்க்கு எதிராக செயல்படும் ரயில்வே துறையினரின் செயல்களை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தபோவதாக ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சென்னையில் அறிவித்துள்ளது.
இன்றைய நிலைமையில் நாம் நமது உரிமைகளை போராடித்தான் பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் வரும் 01/09/2009 அன்றைய போராட்டத்தினை அறவழியிலும், சட்டத்தின் அனுமதியுடனும் நடத்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. எனவே திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனுடையோர் அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமாய் திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கம் அன்புடன் அழைக்கிறது

மாற்றுத்திறனுடையோரை பற்றிய மற்ற இணையதள இணைப்புகள் கீழே கொடுக்கபட்டுள்ளன.

http://discuss.itacumens.com/index.php/topic,77201.0.html

http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=15513

http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=14802

http://search.webdunia.com/search.aspx?q=%u0B8A%u0BA9%u0BAE%u0BC1%u0BB1%u0BCD%u0BB1%u0BCB%u0BB0%u0BCD&num=10&w=true&lid=TM&cp=1&st=web

http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=15937

http://www.viparam.com/2/3/16431.html

http://friendlyfiretamil.wordpress.com/2007/07/09/லலித்குமார்/

மேற்கண்ட இணையதள இணைப்புகள் மாற்றுத்திறனுடையோரின் பார்வைக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மேற்கண்ட இணைப்புகளில் உள்ள கருத்துகளுக்கு எந்த விதத்திலும் எங்களது இந்த ப்லொக்ச்பொட் பொறுப்பாகாது என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

நமது சங்கத்தின் அலுவலகம்

1991 முதல் மாற்றுத்திறனுடையோர்க்காக பாடுபட்டு வரும் நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முனேற்ற சங்கம் கடந்த ௨007 முதல் அரசில் முறையாக பதிவுபெற்ற சங்கமாக, (பதிவு எண்:151/2007) சங்கத்தின் வரவுசெலவு கணக்குகளை முறையாக அரசிற்கு சமர்ப்பித்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் இதுநாள்வரை சங்கம் செயல்பட தனியாக ஓர் அலுவலகம் இல்லை. ஆகையால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனுடையோரின் முயற்சியால் நமது சங்கத்திற்க்காக அலுவலகம் எண்:52 மாஸ் காம்ப்லெக்ஸ், கடை எண்:3 சிந்தாமணி பஜார், அண்ணா சிலை அருகில், திருச்சி-2. என்ற முகவரியில் விரைவில் செயல்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதனால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனுடையோர்களும் இணைந்து பயன்பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ரயில்வேயில் மற்றுத்திறனுடையோர்க்கு முன்பதிவின்மூலமே பயணம் செய்ய முடியுமா?

தினகரன் நாளிதழில் 19/08/2009 அன்று வெளியான செய்தி நறுக்கு
- நன்றி தினகரன் -

63 வது சுதந்திரதின விழா


சுதந்திர இந்தியாவின் 63வது சுதந்திரதின விழா திருச்சியில் இந்திய பார்வையற்றோர் மேம்பாட்டு சங்கம் சார்பில் 63 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அருட்திரு லூர்து ராஜ் அடிகள் மற்றும் திருச்சி மாவட்ட அரசு வழக்கறிஞர் திரு கிள்ளிவளவன் ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கினர், தொழிலதிபர் திரு. பெருமாள் முன்னிலை வகித்தார். பார்வையற்றோர் சங்க தலைவர் திரு. கணேசன் அனைவரையும் வரவேற்றார். பார்வையற்றோர் சங்க பொதுச்செயலாளர் திரு.மணியன் அறிமுகவுரையற்றினர். வழக்கறிஞர் திரு. ஜவகர், உடல் ஊனமுற்றோர் சங்க தலைவர் திரு. முருகானந்தம், உடல் ஊனமுற்றோர் சங்க பொருளாளர் திரு.வெங்கட்ராமன் மற்றும் திரு.பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செயற்குழு உறுப்பினர் திரு.துரை விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். விழா ஏற்பாட்டினை மருத்துவர் சுந்தர், பார்வையற்றோர் சங்கத்தை சார்ந்த செயலாளர் திரு.ராஜா, பொருளாளர் திரு.வெங்கடேசன், துணைத்தலைவர் திரு.மாணிக்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரு.பாக்கியராஜ், திரு.லெனின், திரு.பாண்டியன் மற்றும் திரு.சுவாமிநாதன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கத்தின் சார்பில் தலைவர் திரு. முருகானந்தம், செயலாளர் திரு. மாரிக்கண்ணன், பொருளாளர் திரு. வெங்கட்ராமன் மற்றும் சங்கத்தின் காப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உப்பிலியபுரம் அறிமுக கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கத்தின் முதல் ஊராட்சி ஒன்றிய அறிமுகக் கூட்டம் உப்பிலியபுரத்தில் உள்ள R.C. நடுநிலைப் பள்ளியில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு விவரங்களை கேட்டறிந்தனர். இக்கூட்டத்திற்கு R.C. நடு நிலைப் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை அவர்கள் தலைமை தாங்கினர். திருச்சிராப்பள்ளி மண்டல தலைவர் திரு. சையது முஸ்தபா அவர்கள் விளக்கவுரையற்றினர். திருச்சிராப்பள்ளி மாவட்ட தலைவர் திரு. முருகானந்தம் செயலாளர் திரு. மாரிக்கண்ணன் பொருளாளர் திரு. வெங்கட்ராமன் சங்க காப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும்