கடந்த 28.08.2009 அன்று ஊனமுற்றோர் சங்கங்களின் சார்பில் சென்னையில் ஊனமுற்றோர்க்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அன்று மட்டும் குறைந்தபட்சம் 2000 ஊனமுற்றவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்து முகாமில் கலந்துகொண்டனர்.
அந்த வேலைவாய்ப்பு முகாமில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து நானும் சென்றிருந்தேன்முகாமினை முடித்துக்கொண்டு மீண்டும்
திருச்சிராப்பள்ளி செல்ல சென்னை எக்மோர் ரயில் நிலையம் வந்ததும் மிகுந்த அதிர்ச்சி, காரணம் ரயில் நிலையத்தில் மாற்ற அனைத்து கவுண்டர்களும் திறந்திருந்த நிலையிலும் பெரும் கூட்டம் நிரம்பி வழிந்தது இந்த நிலையில் ஊனமுற்ற நம்மால் டிக்கெட் எடுப்பது என்பது முடியாத காரியம் எனவே அருகில் உள்ள ஊனமுற்றோர் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம் என நினைத்து ஊனமுற்றோர் டிக்கெட் கவுண்டர் அருகில் சென்ற எனக்கு பெரும் அதிர்ச்சி. காரணம் ஊனமுற்றோர் டிக்கெட் கவுண்டர் முடப்பட்டு இருந்தது. அருகில் விசாரித்து பார்த்ததில் அந்த கவுண்டர் கடந்த சில நாட்களாக திறக்கப்படுவதே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. அப்பொழுது எடுத்த வீடியோ கட்சியினை இங்கே வழங்கியுள்ளேன் இதனை பார்க்கும் வாய்ப்புள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்தால் சரி.
No comments:
Post a Comment