இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

63 வது சுதந்திரதின விழா


சுதந்திர இந்தியாவின் 63வது சுதந்திரதின விழா திருச்சியில் இந்திய பார்வையற்றோர் மேம்பாட்டு சங்கம் சார்பில் 63 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அருட்திரு லூர்து ராஜ் அடிகள் மற்றும் திருச்சி மாவட்ட அரசு வழக்கறிஞர் திரு கிள்ளிவளவன் ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கினர், தொழிலதிபர் திரு. பெருமாள் முன்னிலை வகித்தார். பார்வையற்றோர் சங்க தலைவர் திரு. கணேசன் அனைவரையும் வரவேற்றார். பார்வையற்றோர் சங்க பொதுச்செயலாளர் திரு.மணியன் அறிமுகவுரையற்றினர். வழக்கறிஞர் திரு. ஜவகர், உடல் ஊனமுற்றோர் சங்க தலைவர் திரு. முருகானந்தம், உடல் ஊனமுற்றோர் சங்க பொருளாளர் திரு.வெங்கட்ராமன் மற்றும் திரு.பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செயற்குழு உறுப்பினர் திரு.துரை விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். விழா ஏற்பாட்டினை மருத்துவர் சுந்தர், பார்வையற்றோர் சங்கத்தை சார்ந்த செயலாளர் திரு.ராஜா, பொருளாளர் திரு.வெங்கடேசன், துணைத்தலைவர் திரு.மாணிக்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரு.பாக்கியராஜ், திரு.லெனின், திரு.பாண்டியன் மற்றும் திரு.சுவாமிநாதன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கத்தின் சார்பில் தலைவர் திரு. முருகானந்தம், செயலாளர் திரு. மாரிக்கண்ணன், பொருளாளர் திரு. வெங்கட்ராமன் மற்றும் சங்கத்தின் காப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment