வரும் 01/09/2009 அன்று ஊனமுற்றோர்க்கு எதிராக செயல்படும் ரயில்வே துறையினரின் செயல்களை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தபோவதாக ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சென்னையில் அறிவித்துள்ளது.
இன்றைய நிலைமையில் நாம் நமது உரிமைகளை போராடித்தான் பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் வரும் 01/09/2009 அன்றைய போராட்டத்தினை அறவழியிலும், சட்டத்தின் அனுமதியுடனும் நடத்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. எனவே திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனுடையோர் அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமாய் திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கம் அன்புடன் அழைக்கிறது
No comments:
Post a Comment