மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் மற்றும் அதன் அலுவல்சாரா உறுப்பினர்களின் மூன்றாண்டு பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டு இவ்வாரியத்தின் உறுப்பினர்கள் குழுவை முதலமைச்சர் கருணாநிதி திருத்தியமைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களுடைய முன்னேற்றத்தில் சிறப்புக்கவனம் செலுத்துவதற்காக தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறையிலிருந்து பிரித்து, தமது நேரடி கண்காணிப்பில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என்னும் ஒரு புதிய துறையை உருவாக்கியுள்ள முதலமைச்சர் கருணாநிதி அத்துறைக்கு ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியைச் செயலாளராகவும் நியமனம் செய்துள்ளார்.