இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

ஏப்.10ல் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,​ மாற்றுத் திறனாளிகளுக்கும் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா.​ ​ திருச்சி மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் பயிற்சியை மன்னார்புரம் விழியிழந்தோர் மகளிர் மறுவாழ்வு இல்லத்தில் அன்மையில் தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது:​ ​ ​ 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் துறைக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ. 176 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.​ ​ ​ திருச்சி வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் வகையில்,​ மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.​

இந்த முகாமில் 28 மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சையளிக்க உள்ளனர். இலவசமாக மருத்துவப் பரிசோதனைகள் செய்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.​ ​ ​ தவிர,​ இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில்,​ 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு,​ பல்வேறு துறை அலுவலர்கள் மூலம் அவர்களின் குறைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் நிவர்த்தி செய்யும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படும்.​ ​ ​ 

மாற்றுத் திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில்,​ ஒரு கால் செயலிழந்த 20 பெண்களுக்கு அழகுக்கலைப் பயிற்சியும்,​ பார்வையற்ற 20 பெண்களுக்கு ரெக்சின் பை தயாரித்தல் பயிற்சியும்,​ மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மனநலன் குன்றிய 20 பேருக்கு காகிதப் பை தயாரித்தல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment