இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

மாற்று திறனாளிகள் 95 பேருக்கு ஆசிரியர் பணி நியமன ஆணை: கருணாநிதி வழங்கினார்

பார்வையற்ற 95 மாற்றுததிறனாளிகளுக்கஅரசஉயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலபட்டதாரி ஆசிரியர்களாகபபணி நியமஆணைகளமுதலமைச்சரகருணாநிதி இன்றவழங்கினார்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்து, அவர்களில் 10 பேருக்கு நியமன ஆணைகளை
முதலமைச்சர் கருணாநிதி வழங்குவதாகத் திட்டமிடப் பட்டிருந்தது.

எனினும், 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் ஒருசேர கண்ட முதலமைச்சர் கருணாநிதி, அவர்கள் அனைவருக்கும் தாமே நேரடியாகப் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துகள் கூறினார். இன்று பணி நியமன ஆணைகள் பெற்ற 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளில் 68 பேர் ஆண்கள் 27 பேர் பெண்கள் ஆவர்.

இந்த 95 மாற்றுததிறனாளிகளுடனசேர்ந்ததமிழஅரசஉயர்நிலமற்றுமமேல் நிலைபபள்ளிகளிலஇதுவரை 29 பேரமுதுகலஆசிரியர்களாகவும் 856 பேரபட்டதாரி ஆசிரியர்களாகவும், 22 பேரஆசிரியபபயிற்றுநர்களாகவும், 227 பேரஇடைநிலஆசிரியர்களாகவுமமொத்தம் 1114 மாற்றுததிறனாளிகளநியமனமசெய்யப்பட்டஉள்ளனர்.

No comments:

Post a Comment