இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஊனமுற்றோர் இல்லத்துக்கு 'சீல்'

             தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே, அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஊனமுற்றோர் இல்லத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

             தஞ்சை அடுத்த வல்லம் எம்.ஜி.ஆர்., நகரில், 1994ம் ஆண்டு முதல், 'சந்திரா அறக்கட்டளை' என்ற பெயரில் உடல் ஊனமுற்றோர் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. அரசின் அனுமதி ஏதும் பெறாமல் இது செயல்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2002ம் ஆண்டு, ஜான்பிரிட்டோ என்பவர் இந்த இல்லத்தை வாங்கினார். பாலமுருகன் அறக்கட்டளை உதவியுடன், இக்கட்டடம் விரிவாக்கம் செய்யப்பட்டு, போர்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து, இல்லம் நடந்து வந்தது. ஊனமுற்றோர் இல்லத்துக்கு அரசின் இளைஞர் நீதிச்சட்டம், உடல் ஊனமுற்றோருக்கான சமவாய்ப்பு, சமூக பாதுகாப்புச் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.

                    இவ்வாறு பதிவு செய்தால் மட்டுமே, ஊனமுற்றவர்கள் உட்பட மாற்றுத் திறன் கொண்டவர்களை அங்கு தங்க அனுமதித்தல், அவர்களது பெற்றோரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு கண்காணித்தல் மற்றும் அரசின் நிதியுதவிகளை பெறுதல் போன்றவை செய்ய முடியும். இந்த இல்லத்துக்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை. அடிப்படை வசதி இல்லை. இருந்தும், பெற்றோர் மற்றும் பிறர் உதவியால் இந்த இல்லம் செயல்பட்டது. நேற்று, தஞ்சை டி.ஆர்.ஓ., கருணாகரன் தலைமையில், அதிகாரிகள் அங்கு திடீர் ஆய்வு நடத்தினர். அங்கு, செங்கம்பட்டி ராமராஜ் (18), திருக்கானூர்பட்டி மதியழகன் (12), வல்லம் சரத்குமார் (12) ஆகிய மூன்று பேர் மட்டுமே இருந்தனர். முறையான அனுமதியின்றி அந்த இல்லம் செயல்பட்டதால், அந்த இல்லத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது
 
 

No comments:

Post a Comment