இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

ஊனமுற்றோர் துறை - ஜெ. பெருமை

              ஊனமுற்றோர் நலனுக்கு தனித்துறை ஏற்படுத்தியது நான் தான் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

            ஊனமுற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை 1981ல் எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். 1992ல், ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கென, ஒரு தனித் துறையையே நான் ஏற்படுத்தினேன். 1994ல், முதன் முறையாக, எனது அரசுதான், ஊனமுற்றோருக்கான மாநிலக் கொள்கையை வகுத்தது. ஊனமுற்றோருக்கு சம வாய்ப்பு அளிக்கவும், அவர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு ஊனமுற்றோர் விதிகள்2002 எனது அரசால் இயற்றப்பட்டது.


            எனது ஆட்சிக் காலத்தில் ஊனமுற்றோருக்கென்று சிறப்பான பல திட்டங்களை வகுத்து, அவற்றை செயல்படுத்துவதில், தமிழக அரசு, ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்ததால், 2004ம் ஆண்டில் ஊனமுற்றோர் நாளன்று குடியரசுத் தலைவர் வழங்கிய 58 தேசிய விருதுகளில், 14 விருதுகளை தமிழகம் பெற்றது.

           கடந்த 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், ஊனமுற்றோருக்கான சலுகைகள் அவர்களைச் சென்றடையவில்லை. உதாரணமாக, நீலகிரி மாவட்டத்தில் ஊனமுற்றோருக்கான சலுகைகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும், தொகுப்பு வீடுகளுக்கு இலவச பட்டா வழங்கப்படுவதில்லை என்றும் அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

             எனவே, ஊனமுற்றோருக்கான அனைத்து சலுகைகளும் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில், ஏப்ரல் 12ம் தேதி (இன்று) காலை 11 மணி அளவில், குன்னூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment