இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

கடந்த 4ஆண்டுகளில் ஊனமுற்றோர் நலனிற்காக ரூ.4கோடி ஒதுக்கீடு: அமைச்சர் கீதாஜீவன் தகவல்!

 
தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் ஊனமுற்றோர் நலனிற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் நடந்த விழாவில் தெரிவித்தார்.

உலக ஊனமுற்றோர் தினவிழா, மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு மையம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி கலையரங்கில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் 59 பயனாளிகளுக்கு ரூ.12.92லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், தமிழக அரசு ஊனமுற்றோர் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. தமிழக முதல்வர் கலைஞர் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கடந்த 2006-07ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.22.12லட்சமாக இருந்த தொகையை 2009-10ம் ஆண்டில் ரூ.2.20கோடியாக உயர்த்தியுள்ளார்.

நடப்பு ஆண்டில் 4368 ஊனமுற்றோர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4ஆண்டுகளில் மட்டும் ரூ.3.92கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10,277 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் கீதாஜீவன்.

விழாவில், 5 பேருக்கு ரூ.34,500 மதிப்புள்ள 3சக்கர மோட்டார் வாகனங்களையும், ஊனமுற்றோர், ஊனமுற்றோரையே திருமணம் செய்த நபர்கள் 50பேருக்கு தலா ரூ.20ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. மேலும், சுயதொழில் துவங்க 4பேருக்கு தலா ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது.

மாநகராட்சி மேயர் கஸ்தூரி தங்கம், மாநரகாட்சி உறுப்பினர் பிரபு, மறுவாழ்வுத் துறை அலுவலர் மனோகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஹரிராம் உட்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர். 
 

No comments:

Post a Comment