அமைப்பாளர்களாகிய திருமதி.புவனேஸ்வரி, திருமதி.அங்கம்மாள், திரு.ராஜேந்திரன் ஆகிய பேராசிரியர்கள் இந்த விழிப்புணர்வு முகாமிற்கு முன்னின்று ஏற்பாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பேராசிரியை திருமதி.புவனேஸ்வரி அவர்கள் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் திருமதி.ஜெசிந்த அவர்கள் துவக்கவுரையற்றினார். திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் திரு.மாரிக்கண்ணன் அவர்கள் அரசினால் மாற்றுத்திறனுடையோர்க்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்,
திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் பொருளாளர் திரு.வெங்கட்ராமன் மாற்றுத்திறனுடையோர் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அவற்றிக்கான தீர்வுகளும் பற்றி உரையாடினார்.
வழக்கறிஞர் திரு.வின்சென்ட் அவர்கள் தகவலறியும் உரிமை சட்டம் பற்றியும் அதனை பயன்படுத்தும் விதம் பற்றியும் அந்த சட்டம் குறித்த தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
வழக்கறிஞர் திரு.மார்டின் அவர்கள் மாற்றுத்திறனுடையோர்க்கான இந்திய அரசின் சட்டங்கள் மற்றும் 2007 ம் ஆண்டில் ஐ.நா சபை அறிவித்த பிரகடணம் ஆகியவை பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த முகாமில் இதே கல்லூரியில் பயிலும் 36 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
நமது பாரதம் வல்லரசாவதில் உங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை.இப்படிக்கு
ReplyDeletewww.aanmigakkadal.blogspot.com