இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

ஊனமுற்றோருக்கான பெரிய திட்டத்தை நடைமுறை படுத்த நடவடிக்கை எடுப்போம்: கருணாநிதி

திருச்சி, மார்ச்.4-திருச்சியில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசுகையில், மாற்றுத் திறனாளிகளின் நன்மைக்காக ஐ.நா. மன்றத்திலே எல்லா நாடுகளும் ஒத்துக் கொண்டு ஒரு ஒப்பந்தமும் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்திலே கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இந்தியா முழுமையும் உள்ள ஊனமுற்றோருக்கு- அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒப்பந்தப்படி வசதி வாய்ப்புகள், அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றனவா என்றால் இல்லை. நான் அதைப்பற்றி இந்த ஆண்டு நம்முடைய நிதி அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட விருக்கின்ற நிதி நிலை அறிக்கையில் - மத்திய அரசு அன்றைக்கு செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றி -இந்தியாவிலே இருக்கின்ற ஊனமுற்றோருக்கெல்லாம் நன்மைகளைச் செய்ய வேண்டும், உரிமைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக இருக்கிறோம். தமிழ்நாடு அரசும் சேர்ந்து தான் இந்திய அரசோடு ஒத்துழைத்து அந்த இயலாதவர்களுக்கு மாற்றுத் திறனுடையோருக்கு வழங்கப்படுகின்ற காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற முறையில் தான் அதை நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். எனவே இப்போது ஏழையெளியோருக்கு குடிசைகளை மாற்றி வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை விட பெரிய திட்டம், இந்தத் திட்டம். இந்தத் திட்டம் நிறைவேறிக் கொண்டிருக்கும்போதே, அந்தத் திட்டமும் நடைமுறைக்கு வர இந்த அரசு ஆவன செய்யும் என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

நன்றி: மாலைமலர்
http://www.maalaimalar.com/2010/03/04040203/political.html

No comments:

Post a Comment