உறுப்பினர்களின் சேவை விதிகள் வரைமுறைகள்:
பி.14.து.பி.(1). இச்சட்டத்தின் கீழ் அல்லது இச்சட்டத்தால் வேறு வகையில் வழங்கப்பட்டாலன்றி விதி (ஊ) அல்லது விதி (ஏ) து.பி.2. பி.3யின்படி நியமிக்கப்பட்டுள்ள ஒரு மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டது முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு பதவியை வகிப்பார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் முடிந்துவிடட போதிலும் தனக்குப் பின் வருபவர் பதவி ஏற்கும் வரை உறுப்பினர் தனது பதவியில் தொடர்ந்து இருக்கலாம்.
து.பி.(2) வகிக்கும் பதவியால் உறுப்பினரின் பதவி தான் உறுப்பினராக நியமிக்கப்பட காரணமான பதவியில் இல்லாமல் போனால் உறுப்பினர் பதவியும் முடிவுக்கு வந்துவிடும்.
து.பி.(3) மாநில அரசு, பி-13, து.பி.2. விதி(ஊ) அல்லது விதி(ஏ)ன் படி நியமிக்கப்பட்ட ஒரு உறுப்பினரின் பதவிக்காலம் முடியும் முன்பே ஏற்றது என்று, என நினைத்தால், எதிராக காரணம் பாட்ட டஅளவலான வாய்ப்பளித்த பின் எந்த ஒரு உறுப்பினரையும் நீக்கிவிடலாம்.
து.பி.(4) பி.13,து.பி.2, விதி(ஊ) அல்லது விதி(ஏ)ன் படி நியமிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் எந்த நேரத்திலும் மாநில அரசுக்கு தன் கைப்பட எழுதி தன் பதவியை ராஜினாமா செய்யலாம். அத்துடன் மேற்படி உறுப்பினரின் பதவியிடம் காலியாகிவிடும்.
து.பி(5) மாநில ஒருங்கிணைப்பு குழுவில், ஒரு புதிய நியமனத்தின் மூலம், ஒரு தற்காலிக காலியிடம் நிரப்பட்படலாம். ஆனால், புதிதாக நியமிக்கப்படும் உறுப்பினர், தாம் பதிலாக நியமிக்கப்பட்ட உறுப்பினரின் மீதமுள்ள பதவி காலத்திற்கு மட்டுமே அப்பதவியை வகிக்கலாம்.
து.பி.(6) பி.13,து.பி.2, விதி(ஊ) மற்றும் விதி(ஏ)ன் படி நியமிக்கப்படும் ஒரு உறுப்பினர் மறு நியமனத்திற்கு தகுதி பெற்றவர் ஆவார்.
து.பி.(7) பி.13.து.பி.2, விதி (ஊ) மற்றும் விதி (ஏ)ன் படி நியமிக்கப்படும் உறுப்பினர், மாநில அரசு வகுத்துரைக்கும படிகளை பெறுவார்.
தகுதி இழப்புகள்
பி.15.துபி.1-ல் காணப்படும் எந்த ஒரு நபரும் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினராக இருக்க இயலாது:-
அ. திவால் ஆனவராக இருந்தால், அல்லது என்றாவது அங்ஙனம் தீர்ப்பளிக்கட்டு இருந்தால், கடன்கள் சுலுத்துவதை நிறுத்தி வைத்து இருந்தால் கடன்காரர்களுன் சிக்கல் உருவாக்கி இருந்தால் அல்லது.
ஆ. நல்ல மன நிலையில் இல்லாதவராகவோ, அல்லது அவ்வாராக உரிய நீதி மன்றம் ஒன்றினால் பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தாலோ அல்லது.
இ. மாநில அரசின் அபிப்பிராயப்படி, அறிவு கீழ்மை உள்ளவர் எனும் அளவிற்கு ஏதாவத ஒரு குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டு இருந்தாலோ அல்லது.
ஈ. இச்சட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டால் அல்லது சாட்டப்பட்டு இருந்தால் அல்லது.
உ. மாநில ஒருங்கிணைப்புக் குழுவில் இவர் உறுப்பினராக தொடர்ந்து இருப்பது பொது மக்கள் நலனுக்கு தீங்கானது என மாநில அரசு கருதும் அளவிற்கு தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து இருந்தால்,
து.பி.2, எதிராக காரணம் காட்ட டஅளவான வாய்ப்பு அளிக்கப்படாமல் சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு இப்பிரிவின் கீழ் மாநில அரசு நீக்கல் ஆணை பிறப்பிக்கலாகாது.
து.பி.3, பி.14, து.பி.1 அல்லது து.பி.6ல் எவ்வாறு இருப்பினும் இப்பிரிவின் கீழ் நீக்கப்பட்ட ஒருவர், உறுப்பினராக மறு நியமனத்திற்கு தகுதி அற்றவர் ஆகிறார்.
பதவி இடம் காலியாதல்
பி.16.து.பி.1. மாநில ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர், பி.15ல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி இழப்புகள் எவற்றிற்கேனும் ஆட்பட்டால் அவரது பதவி இடம் காலியாகிவிடும்.
பகுதி - 12 - சட்டம் 1995 - அத்தியாயம் - 4 - தொடரும்
No comments:
Post a Comment