இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

இலவச சீருடை மற்றும் நோட்டுபுத்தகம் வழங்கும் விழா

                திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் மற்றும் மாற்றுத்திறனாளர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக இலவசமாக நோட்டுபுத்தகங்கள் வழங்கும் விழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.
    
                இந்த வருடத்திற்கான விழாவினை திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்துடன்  நேயம் அறக்கட்டளையும் இணைந்து மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குவதோடு மட்டுமல்லாமல் இலவச சீறுடை வழங்கும் விழாவினையும் சேர்த்து நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                இந்த விழாவானது வரும் 01.08.10 அன்று நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பயன்பெற விரும்புபவர்கள் தங்களது பெயரினை முன்னதாகவே பதிவுசெய்துகொள்ள வேண்டுமாறு கேட்டு்கொள்ளப்படுகிறார்கள். 

                தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: திரு.மாரிக்கண்ணன், செயலாளர், கைபேசி எண்:9865075501.

              இவ்விழாவில் பெரும்பாண்மையானவர்கள் களந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment