இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு

               நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து அதற்கான நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை செயல்படுத்திட தற்போது முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

              பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்திடும் விதமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகளில் பயிலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே கல்விக் கட்டணத்தை ரத்துசெய்ததுடன், இந்த கல்வியாண்டு முதல் அவர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேணடிய தனிக் கட்டணத்தை ரத்து செய்தும், மாநில அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் எவ்விதத்திலும் தடையின்றிப் பெற்றுப் பயன் அடைவதற்கு உதவும் வகையில், நலத்திட்ட உதவிகளைப் பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்சவரம்பினை முற்றிலும் ரத்து செய்தும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

                   முதல்வரின் உத்தரவால் 22,685 மாற்றுத் திறனாளிகள் ஆண்டுக்கு 7.71 கோடி ரூபாய் அளவிற்கு பயன்பெறுவர் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment